உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவை ஆட்டிபடைக்கும் கனமழை: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திராவை ஆட்டிபடைக்கும் கனமழை: 8 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவில் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் 8 பேர் உயிரிழந்தனர். ரயில் சேவை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 18 செ.மீ., மழை பதிவானது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dvghx2lr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் 8 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் இருந்து செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி