உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோச்சிங் சென்டரில் மழைநீர் புகுந்தது : மாணவி பலி

கோச்சிங் சென்டரில் மழைநீர் புகுந்தது : மாணவி பலி

புதுடில்லி: டில்லியில் கோச்சிங் சென்டரில் மழைநீர் புகுந்ததால் அங்கு தங்கி படித்து வரும் மாணவர்கள் வெளியே முடியாமல் சிக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவிபலியானர்.டில்லியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. டில்லி ராஜேந்திரா நகரில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான ராஜேந்திரா கோச்சிங் சென்டர் உள்ளது. இங்கு சில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.இங்கு மழைநீர் புகுந்ததால் கீழ் தளத்தில் தங்கியுள்ள மாணவர்கள் மழைநீரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாணவி ஒருவர் பலியானதாகவும் இருவர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்த டில்லி மேயர், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ