உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் ஒழுகும் மழைநீர்: காங்., ஒத்திவைப்பு நோட்டீஸ்

பார்லி.,யில் ஒழுகும் மழைநீர்: காங்., ஒத்திவைப்பு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புது பார்லிமென்ட் லாபி பகுதியில் மழை நீர் ஒழுகுவதால், அந்த இடத்தில், ஊழியர்கள் வாளியை வைத்து பிடித்து கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை டில்லியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. 112.5 மி.மீ., மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, பார்லிமென்ட் செல்லும் சாலைகள் மற்றும் பார்லிமென்ட் வளாகத்தின் உட்பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது.பார்லிமென்ட் உள்ளே லாபி பகுதியில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டு ஒழுகியது. அந்த இடத்தில் ஊழியர்கள் வாளியை வைத்து மழைநீரை பிடித்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், மழைநீர் கசிவதால், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இது குறித்து விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Jbmadhavan Jbmadhavan
ஆக 01, 2024 18:52

திரு.கார்கே அவர்கள் வேலை யஇன்மஐ பற்றி பேசினார். ஆனால் 54 வயது இளைஞர்களுக்கு எல்லாம் அரசில் வேலை தர இயலாது என்பது தெரியாது போலும்.


அப்புசாமி
ஆக 01, 2024 17:34

செங்கோலாலேயே முட்டியத் தட்டணும்


Mr Krish Tamilnadu
ஆக 01, 2024 17:30

சுய சார்பு, தன்னிறைவு என்னும் பிரதமரின் சிந்தனையில், அவருக்கே தெரியாமல் கசிவுக்கள் உள்ளது போல, அதனால் தான் இந்தியாவின் புதிய பெருமையில் மழை நீர் கசிவு. கசியட்டும் மக்கள் வரிப்பணம். அயோத்தியில் ராமர் கோவிலில் பிரச்சனை இல்லையே. நல்லது


D.Ambujavalli
ஆக 01, 2024 16:34

'நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாளே முதலை புறப்பட்டதாம் ' பிரதிஷ்டை ஆன நாலாம் மாதமே ஒழுகும் கோயில், இரண்டு கூட்டம் கூட நடக்காத பார்லிமென்டில் வாளிகளில் பிடிக்கும் அளவு ஒழுக்கு நல்ல 'ஒழுக்கமான' காண்ட்ராக்டர் களும், அதிகாரிகளும் நன்றாகவே வேலையை 'காட்டி' இருக்கிறார்கள் என்று தெரிகிறது


ஆரூர் ரங்
ஆக 01, 2024 15:04

இங்குள்ள புதிய ஸ்டேடியமே இடிந்து விழுந்தது.


Mohan
ஆக 01, 2024 13:48

அய்ய அப்ப பேய் மழை பெஞ்சதை மறந்துட்டீங்க. சென்னைல வெள்ளம் வந்தா வந்த வேகத்துல வடிஞ்சுடும்னீங்க என்ன ஆச்சு விடியல் சம்பள வாசகரே. சரியா கட்டலையா சரி செய்ங்கன்னு சொல்றதை விட்டு செங்கோல்ங்கிறீங்க காண்டிராக்ட்ல எவ்வளவு பாஜக தின்னுச்சோங்கிறீங்க உங்க விடியல் கூட்டணி காங்கிரஸ்காரங்களும் ,கம்யூணிஸ்ட்களும், மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க தங்களுக்கு சொந்தமான அரதப்பழசான கட்டிடங்களை மிக அதிகமான வாடகைக்கு விட்டு பகல் கொள்ளை அடிச்சதை நிறுத்துவதற்காக , புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையை தாங்காமல் விடியல் கூட்டணி சம்பள ஆட்கள் என்னென்னமோ உளறுகின்றன


பாக்கியநாத்
ஆக 01, 2024 13:38

இந்த கட்டிடத்தைத் தான் ராத்திரி தூக்கம் வராம போய் ஆய்வு பண்ணாராம்.பெரிய ஜீ. பெரிய நியூசாப் போட்டு மெடல்.குத்தி உட்டாங்க.


ஆரியதிராவிடன்
ஆக 01, 2024 13:36

அது லோக்சபா இல்லை. லீக் சபா... 970 கோடி ருவா தண்டச் செலவில் சங்கிகளை வெச்சு கட்டினா இப்பிடித்தான். சரி போங்க. ஒழுகுற தண்ணிய அண்டாவில் புடிச்சு கேண்டீனில் சமையலுக்கு பயன்படுத்துங்க.


கனோஜ் ஆங்ரே
ஆக 01, 2024 12:38

இவங்க... அழகான பழைய பார்லிமெண்ட் ஒழுகுதுன்னு சொல்லி புதிய பார்லிமெண்ட் கட்டி... ஆறுமாசத்திலேயே சிறிய மழைக்கே ஒழுகுது... இந்த “நேர்மை”ய... “ஊழலின்மை”ய என்னத்த சொல்றது... அதுல வேற... இங்க சுத்துற சிலதுங்க... நேர்மை, நீதி, நாணயம், ஊழலின்மை, உத்தமபுத்திரன்..ன்னு புளுகுதுங்க... “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தக்குமுக்கு திக்கு தாளம்”... மாதிரி ஆயிடுச்சு... போங்கய்யா, நீங்களும் உங்க நேர்மையும்.... எதெதுல, கட்டிங் பார்க்க முடியுமோ அதுல எல்லாத்துலேயும் பார்த்துடுறாங்க...? இதுல வேற ராமரை துணைக்கு அழைச்சிகிட்டாங்க... அந்த ராமர் கோவில் தளமே சின்ன மழைக்கே ஒழுகுது.... ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாட்டுக்காரன் கட்டுன தஞ்சை பெரியகோவில் ஒழுகுல, ஆடலை, அசையல...?


Velan Iyengaar
ஆக 01, 2024 11:38

அட ட அட ...பெருமை கொண்டு முடியல


மேலும் செய்திகள்