மேலும் செய்திகள்
குஜராத்தில் ரூ.3 லட்சத்தை தாண்டிய தனிநபர் வருமானம்
29 minutes ago
மத்திய அரசே காரணம்!
35 minutes ago
ஜெய்ப்பூர்: 'திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு சம்மதத்துடன் திருமணம் செய்யாமல், 'லிவிங் டு கெதர்' முறையில் ஒன்றாக வாழ உரிமை உண்டு' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் மற்றும் 19 வயது இளைஞரும் சேர்ந்து மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'நாங்கள் இருவரும் கடந்த அக்டோபர் முதல் திருமணம் செய்யாமல், 'லிவிங் டுகெதர்' முறையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். 'எங்கள் குடும்பத்தினர், எங்களை சேர்ந்து வாழ விடாததுடன், கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமணம் செய்வதற்கான வயதை எட்டாத நிலையில், 'எப்படி ஒரு இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ இளைஞரை அனுமதிக்க முடியும்?' என, கேள்வி எழுப்பினார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்பதை ஏற்க முடியாது. அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ், வாழ்க்கை உரிமை மற்றும் ஒரு மனிதரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது. இந்த சட்டத்தின் கீழ், நேரடி உறவுகள் தடை செய்யப்படவில்லை; குற்றமாக்கப்படவில்லை. எனவே, 18 வயதை கடந்தவர்கள், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், ஒன்றாக வாழ உரிமை உண்டு. அவர்கள், இருவருக்கும் இதில் முழு சம்மதம் இருந்தால் போதும். ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க மாநிலத்திற்கு அரசியலமைப்பு கடமை உள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ள உண்மையை சரிபார்க்கவும், அச்சுறுத்தல் தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கவும், தேவைப்பட்டால் தம்பதிக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும் பில்வாரா மற்றும் ஜோத்பூர் போலீஸ் எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
29 minutes ago
35 minutes ago