உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கடவுள் அல்ல, மனிதர் காங்., உக்ரப்பா ஆராய்ச்சி

ராமர் கடவுள் அல்ல, மனிதர் காங்., உக்ரப்பா ஆராய்ச்சி

விஜயநகரா: ''கோடிக்கணக்கான பக்தர்கள் ஆராதிக்கும், பூஜிக்கும் ஸ்ரீராமர், கடவுள் அல்ல,'' என, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., உக்ரப்பா தெரிவித்தார்.விஜயநகராவில் நேற்று அவர் கூறியதாவது:ஸ்ரீராமரை கோடிக்கணக்கான பக்தர்கள் ஆராதிக்கின்றனர், பூஜிக்கின்றனர். ஆனால் இவர் கடவுள் அல்ல; மனிதர். இவர் ராஜகுமாரன், மன்னர். இவரிடம் பா.ஜ.,வினருக்கு பக்தி உள்ளதா?கடந்த முறை புல்வாமா பெயரில், தேர்தலை எதிர்கொண்டனர். இம்முறை ராமரின் பெயரை கூறி, லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றனர். ராமரின் பெயரைக் கூற தகுதியானவர்கள் காங்கிரசார்தான். ராமர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வாக்கு தவறுபவர்.ராமரின் கொள்கைகளை பின்பற்றாவிட்டால், பிரதமர் மோடி எப்படி ராம பக்தராக இருப்பார். இவரது மனைவி அஞ்சனாத்ரிக்கும், ஹம்பிக்கும் வந்து சென்றார். முதலில் அவரை பாதுகாக்கட்டும். ராமாயணத்தில் அஸ்வமேத யாகம் நடத்த வேண்டுமானால், கணவர், மனைவி சேர்ந்து நடத்த வேண்டும் என, வசிஷ்டர், விஸ்வாமித்ரர் கூறுகின்றனர். அதன்படி ராமன், தன் மனைவி சீதை உருவச்சிலையை தங்கத்தால் செய்து வைத்து, யாகம் நடத்துகிறார். பா.ஜ.,வினர் ராமர் கொள்கைக்கு எதிரானவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை