உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் 11 சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு: 73.05 சதவீதம் பதிவானது!

மணிப்பூரில் 11 சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு: 73.05 சதவீதம் பதிவானது!

இம்பால்: கடந்த வாரம் 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலின்போது வன்முறை ஏற்பட்ட மணிப்பூரில் 11 சாவடிகளில் இன்று (ஏப்.22) மறு ஓட்டுப்பதிவு நடந்தது. 3 மணி நிலவரப்படி, 73.05 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. கடந்த ஓட்டுப்பதிவின்போது கிழக்கு இம்பால், மொய்ராங்ஹம்பு, தொங்கம்லெய்க்காய் உள்ளிட்ட சில இடங்களில் பூத்தை சிலர் கைப்பற்ற முயற்சித்தபோது வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டினர். இது போல் சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 47 சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் மேகசந்திரா தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தினார். ஆனாலும் 11 சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதன்படி இன்று மறு ஓட்டுப்பதிவு நடந்தது. மறு ஓட்டுப்பதிவு நடந்தது. 3 மணி நிலவரப்படி, 73.05 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Priyan Vadanad
ஏப் 22, 2024 10:05

நமது பிரதமரும் உள்துறை அமைச்சரும் மணிப்பூருக்கு விசிட் அடித்துவிட்டு வந்தபின் அங்கே எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்களே அப்புறம் ஏன் இந்த மறு வாக்கு பதிவு?


vijay s
ஏப் 22, 2024 09:30

sirappuu


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை