உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடாவுடனான உறவு சவாலாகவே உள்ளது: மத்திய அரசு

கனடாவுடனான உறவு சவாலாகவே உள்ளது: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா கனடா இடையிலான உறவு இன்னும் சிக்கலானதாகவே உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்தியா - கனடா இடையிலான உறவு தொடர்பாக பார்லிமென்ட் குழுவிற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா கனடா இடையிலான நிலையான உறவுக்கு பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும் என தொடர்ந்து கனடாவிடம் வலியுறுத்தி வருகிறோம். கனடாவில் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் புகார்களை அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இந்தியாவிற்கு எதிரான திட்டங்களுடன் செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசியல் ரீதியில் அடைக்கலம் கொடுத்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன்னும் சவால் ஆனதாகவே உள்ளது. பிரிவினைவாதிகள், இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட தலைவர்களை கொச்சைப்படுத்துவதை தடுக்கவும், தற்போதைய அரசியல் தலைவர்கள் மற்றும் தூதர்களுக்கு மிரட்டல் விடுப்பதை தடுத்தல் மற்றும் வழிபாட்டு தலங்களை இழிவுபடுத்துதல் மற்றும் சேதப்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கவேண்டும். அந்நாட்டு மண்ணில் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கனடாவை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
நவ 29, 2024 06:23

டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் வாலை சுருட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.


அப்பாவி
நவ 29, 2024 06:12

சீனா வோட பட சண்டை போட்டு இப்போ திருப்பி சேந்துக்கலையா? காலம் மாறும். கனடாவுடன் கை கோர்க்கும் காலம் வரும். கனடா ஆளுங்க இங்கே வந்து படிக்கப் போறாங்க.


சாமிநாதன்,மன்னார்குடி
நவ 29, 2024 08:52

பாஞ்சிலட்சம், உன் வாழ்வில் நீ இன்னைக்குதான் ஒரு உருப்படியான கருத்தை போட்டுருக்க...


ghee
நவ 29, 2024 09:36

... நல்ல கருத்து வருது


J.V. Iyer
நவ 29, 2024 04:30

கனடா கயவன் ஜஸ்டினை பதவியில் இருந்து இறக்கவேண்டும். இதற்கு கனடாவில் உள்ள எதிர் கட்சிகளுடன் கைகோர்க்கலாம். இந்தியாவுக்கு சீக்கியர்கள் வரும்போது ஜானகிருதையாக கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் சிகையை வெட்டி, டர்பன் இல்லாமல் வேறு பெயர்களில் வருவார்கள். இந்தியாவுக்கு ஒரு சில வெளிநாட்டு இந்தியர்களே எதிரிகள்.


Nathan
நவ 29, 2024 01:15

கனடா மற்றும் ஆஸ்திரேலியா சென்று படிப்பவர்களை தரமான கல்வி நிறுவனங்களை தவிர வேறு கல்வி நிறுவனங்களில் படிக்க இந்தியாவில் இருந்து பணம் கொண்டு செல்ல தடை செய்யுங்கள் இந்தியர்கள் வெளி நாடுகளில் தரமான பல்கலைக் கழகங்களில் மட்டுமே படிக்க அனுமதிக்க வேண்டும். அந்த நாடுகள் தரமற்ற கல்வி நிறுவனங்களை கொண்டு நமது நாட்டின் பொருளாதாரத்தை சுரண்ட அனுமதிக்க கூடாது.


Barakat Ali
நவ 28, 2024 22:48

கனடாவைத் தலைமுழுகவும் முடியாது .... அங்கே இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள், இந்தியத் தொழிலதிபர்களை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது ....


SUBBU,MADURAI
நவ 29, 2024 09:10

நீங்கள் சொல்வது போல அங்குள்ள இந்திய மாணவர்களையும், இந்திய தொழில் அதிபர்களையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது என்பது சரிதான். ஆனால் இலங்கையை சேர்ந்த தமிழர்களை நாம் அறவே கண்டு கொள்ளத் தேவையில்லை. அவர்கள் எப்போதுமே நம்மை மதித்தது இல்லை. நம் பாரதத்தின் மேல் பற்றும் அவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை நாம்தான் அவர்களை நம் டொப்பிள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம். ஆனால் அவர்கள் கஞ்சிக்கு செத்து கிடந்தாலும் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களை விட தாங்கள் மேலானவர்கள் என்கிற கர்வத்தில் அலைபவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை