உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு

வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''வட கிழக்கு மாநிலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது'' என தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.டில்லியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வடகிழக்கு மாநிலங்களில் 350 பயோகேஸ் ஆலைகளை அமைப்பதில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்யும். இதனால் 25 லட்சத்திற்கு அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த 40 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இந்தப் பகுதியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது.

மருத்துவமனை

அடுத்த ஐந்து ஆண்டுகளில், எங்கள் முதலீடுகளை இரட்டிப்பாக்குவோம். அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செயற்கை நுண்ணறிவின் புரட்சிகர சக்தியைக் கொண்டு செல்வதே ஜியோவின் முன்னுரிமையாக இருக்கும். மணிப்பூரில் 150 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையை அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.50,000 கோடி முதலீடு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழிலதிபர் கவுதம் அதானி பேசியதாவது: அதானி குழுமம் அடுத்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதலாக ரூ.50,000 கோடி முதலீடு செய்யும். இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வடகிழக்கு மாநில மக்களுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாமி
மே 23, 2025 19:00

அதுக்குண்டான கடனை அரசு வங்கிகள் குடுக்கும். அதை வெச்சு யாவாரம் செஞ்சு லாபம் வந்தால் ஓகே. நஷ்டம் வந்தால் இருக்கவே இருக்கு வாராக்கடன் வங்கி. இவருக்குண்டான கட்டிங் எப்பிடியும் வந்துரும்.


Ganesh
மே 23, 2025 19:43

சாமி நீங்க சொல்றத போலயே வச்சிக்கிட்டாலும்.. இவராச்சும் பேங்க் ல வெளிப்படையா கடன் கேட்டு பிசினஸ் பன்றார்... இங்க சில பேர் மக்கள் பணத்த ஆட்டைய போட்ட பணத்துல பிசினஸ் பண்ணிட்டு அவுங்க குடும்பத்தை தண்ணி ஊத்தி வேற சீராழிச்சிகிட்டு இருக்காங்க... இந்த திருட்டு கட்சிகள் மக்களுக்கு ஊத்தி குடுக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி விட்டது.... இனிமேல் தான் இவர்கள் ஊத்தி குடுத்ததை சாப்பிடவர்கள் ஹாஸ்பிடல் வருவார்கள் அவர்கள் குடும்பத்தை விட்டு மேல் உலகம் போக.... மிகவும் வருத்தமாக உள்ளது


tamil king
மே 23, 2025 16:20

பூனை வெளியே வந்துவிட்டது....


N Sasikumar Yadhav
மே 23, 2025 18:08

உங்கள மாதிரி ஓஷி? கோட்டர் அடித்துவிட்டு குப்புற படுக்க சொல்கிறீர்களா அவர்களை


lana
மே 23, 2025 15:44

பொதுவாக ஒரு நாடு முன்னேற basic industries நன்றாக இருக்க வேண்டும். இவர்கள் mettal cement எரிபொருள் என்று முதலீடு செய்வார்கள். இங்குள்ள KD பிரதர்ஸ் மற்றும் விடியல் corporate media entertainment சாராயம் என்று நம் பணத்தை ஆட்டையை போடும் தொழில் இல் மட்டுமே முதலீடு செய்யும்


Barakat Ali
மே 23, 2025 13:54

எங்க துக்ளக்கார் குடும்பம் எப்படிப்பட்ட வேலைவாய்ப்பெல்லாம் கொடுக்குது தெரியுமா?? உ பிக்களைக் கேட்டுப்பாருங்க.. தெரியும் .....