மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
ஹாவேரி: பா.ஜ., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நடமாடும் கால்நடை ஆம்புலன்சில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை அகற்றிவிட்டு, முதல்வர் சித்தராமையாவின் படத்தை வைத்ததால், கோபமடைந்த பா.ஜ.,வினர், அவரது புகைப்படத்தில் சாணத்தை பூசி எதிர்ப்புத் தெரிவித்தனர்.விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தாலுகா அல்லது மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர்.உடல் நலம் மிகவும் மோசமடைந்த கால்நடைகளை அழைத்துச் செல்வது கடினம். இதை உணர்ந்த, கடந்த பா.ஜ., ஆட்சியில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 'நடமாடும் ஆம்புலன்ஸ்' திட்டத்தை அமல்படுத்தப்பட்டது.இந்த வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றிருந்தது. ஆனால் கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, இந்த ஆம்புலன்ஸ்களில் பிரதமர் மோடி படத்தை அகற்றிவிட்டு, முதல்வர் சித்தராமையா, கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் ஆகிய இருவரின் படத்தை ஒட்டியுள்ளது.ஹாவேரியில் நேற்று இதை பார்த்தை பா.ஜ.,வினர், முதல்வர் சித்தராமையா, கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் ஆகியோரின் படத்தின் மீது சாணத்தை பூசினர்.மத்திய அரசின் திட்டத்தை, தங்களுடைய திட்டமாக சித்திரித்ததாக கூறி, மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
2 hour(s) ago
2 hour(s) ago