உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலில் இருந்துஓய்வு பெறுங்கள் 

அரசியலில் இருந்துஓய்வு பெறுங்கள் 

பெங்களூரு: ''அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள்,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, காங்கிரசில் வெற்றி பெற்ற சென்னப்பட்டணாவின் யோகேஸ்வர் கூறியுள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நாங்கள் சென்னப்பட்டணாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது. பழைய மைசூரு பகுதி மக்கள், துணை முதல்வர் சிவகுமார் தலைமையை ஏற்று கொண்டனர்.வயதான காலத்திலும் பேரனை வெற்றி பெற வைப்பதற்காக, தேவகவுடா பிரசாரம் செய்தார். பேரனை வெற்றி பெற வைத்து, அவருக்கு அரசியல் சொல்லி கொடுப்பேன் என்று சவால் விட்டார். ஆனால், அவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை.உண்மையை சொல்லப் போனால் அவரது போராட்டம், சமூக அக்கறை கொண்டதல்ல. முழுக்க, முழுக்க சுயநலத்திற்கானது. குடும்ப உறுப்பினர்களை அரசியலில் வளர்த்து விட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.தேவகவுடா அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும். எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் தங்கள் பிள்ளைகள் மட்டுமே அரசியலில் வளர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. ம.ஜ.த., கட்சியின் அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை