மேலும் செய்திகள்
நில அபகரிப்பு வழக்கு; அழகிரியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
3 hour(s) ago | 22
சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த சீனர் கைது
4 hour(s) ago | 3
ராய்பூர்: சத்தீஸ்கரில் ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சரண் அடைந்துள்ளான். அவனுடன் மேலும் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 11 பேரும் சரண் அடைந்துள்ளனர்.2026 மார்ச் இறுதிக்குள் நாட்டில் நக்சல்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை தாக்குப்பிடிக்க முடியாமல், நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் சரண் அடைந்து வருகின்றனர்.இந் நிலையில் பிடித்துக் கொடுத்தால் ரூ.1 கோடி வெகுமதி என்று அறிவிக்கப்பட்ட மிக முக்கிய நக்சல் தலைவன் ராம்தேர் மஜ்ஹி சரண் அடைந்துள்ளான். இவனுடன் மேலும் 11 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர். சத்தீஸ்கரில் உள்ள பாகர் கட்டா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கும்ஹி என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் தனது குழுவினருடன் மஜ்ஹி சரண் அடைந்துள்ளான். அப்போது அவன் வைத்திருந்த நவீன ரக ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சரண் அடைந்தவர்களில் 6 பெண் நக்சல் இயக்கத்தினரும் அடக்கம். 303 ரைபிள்கள், சிறிய ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அவர்கள் ஒப்படைத்தனர்.
3 hour(s) ago | 22
4 hour(s) ago | 3