உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் குடிநீரில் காரை கழுவினால் ரூ.2 ஆயிரம் அபராதம்: தலைவிரித்தாடும் பஞ்சத்தால் மாநில அரசு முடிவு

டில்லியில் குடிநீரில் காரை கழுவினால் ரூ.2 ஆயிரம் அபராதம்: தலைவிரித்தாடும் பஞ்சத்தால் மாநில அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குடிநீரை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது, காரை கழுவுவது ஆகியவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.தலைநகர் டில்லியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு டில்லி அமைச்சர் அதிஷி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 200 குழுக்களை அமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, இக்குழுவினர் வீடு வீடாக சென்று சோதனை செய்ய உள்ளனர். அப்போது, குழாய் மூலம் குடிநீரில் கார் கழுவுவது, தண்ணீர் தொட்டி நிரம்பி வடிய செய்தல், வீட்டு உபயோக குடிநீரை வணிக காரணங்களுக்காக பயன்படுத்துவது, வீட்டு கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்துவது ஆகியனவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

டில்லிபாபு
மே 29, 2024 19:18

தலைநகரிலேயே குடிநீர் தட்டுப்பாடு. அம்ரிதோத்சவ் கொண்டாடி வல்லரசாயிடுவோம்.


vijay
மே 30, 2024 12:28

கேஜ்ரிவாலை கேளுங்க சாரே


GMM
மே 29, 2024 15:39

ஊழல் சக்கரவர்த்தி திரு.கெஜ்ரிவால் இலவச மின்சாரம்... என்று ஊரெங்கும் பிரச்சாரம். ஆனால் தண்ணீர் பஞ்சம் பற்றி மறைத்து வந்துள்ளார். சஞ்சய் சேரி அகற்ற முற்பட்ட போது, மத அரசியல் நுழைவு. பெரு நகரங்களில் குடிசை, சேரியில் வாழமுடியாது. அங்கு எல்லாம் அதிக விலை. பணம் எப்போதும் தேவை. பிழைக்க வழிப்பறி, கொலை, குற்ற செயல் அதிகரிக்கும். குடிசை, சேரி மக்கள் வாக்கு மாநகர எல்லையில் இருக்க கூடாது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை