உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.7 கோடி அபராதம் 5 மாதங்களில் அதிரடி

ரூ.7 கோடி அபராதம் 5 மாதங்களில் அதிரடி

ஷிவமொகா: ஷிவமொகா நகர போக்குவரத்து போலீசார், சாலை போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக, ஐந்து மாதங்களில் 6.97 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர்.இது குறித்து, ஷிவமொகா கூடுதல் எஸ்.பி., அனில்குமார் பூமரெட்டி கூறியதாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஷிவமொகா நகரின் பல இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன், போக்குவரத்து விதிகளை மீறுவோர் அடையாளம் காணப்படுகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலிக்கின்றனர்.கடந்த ஐந்து மாதங்களில் 6.97 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 40 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. பல வாகன பயணியர் அபராதம் பாக்கி வைத்துள்ளனர். 6.57 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள், விதிகளை மீறினால் செலுத்த வேண்டிய அபராதம் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை. அபராதம் விதிக்க ஆன்லைன் வசதியை போலீசார் செய்துள்ளனர். டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் அபராதம் செலுத்தலாம். அல்லது நீதிமன்றத்திலும் செலுத்தலாம்.கேமராக்கள் பொருத்திய பின், மக்கள் எச்சரிக்கை அடைந்துள்ளனர். தங்கள் வாகனத்தின் வேகத்தை குறைக்க துவங்கியுள்ளனர். ஹெல்மெட் அணிகின்றனர். ஜீப்ரா லைன் வரும் போது தாண்டாமல் கவனமாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை