உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் தவிடு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

ஆந்திராவில் தவிடு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

அமராவதி: ஆந்திராவில் மினி வேனில் தவிடு மூட்டைகளுக்கு இடையே உரிய ஆவணங்கள் இன்றி கடத்தப்பட்ட 7 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் மூன்று கட்டங்கள் மே 7ம் தேதியுடன் முடிவடைந்தன. அடுத்தக்கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பறக்கும் படையினரும், போலீசாரும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5mhpkgdr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே லாரி மீது தவிடு மூட்டைகள் ஏற்றி சென்ற மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது. மினி வேனில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சாலையில் சிதறின. பறக்கும் படையினர் விசாரணையில் பணம் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. முதல்கட்ட விசாணையில் அந்த பணம் ஐதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

canchi ravi
மே 11, 2024 16:51

அடிச்சக்கை லாரி மோதாமல் இருந்தால் பிடிபட்டிருக்குமா இப்படி எத்தனை வண்டிகளில் பணம் சென்றதோ? கீழே சிதறிய மூட்டையில் ஏழைகளுக்கு எதாவது அகப்பட்டதா?


மேலும் செய்திகள்