உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்ம மெட்ரோவில் இன்று ரூ.30 டிக்கெட் சலுகை

நம்ம மெட்ரோவில் இன்று ரூ.30 டிக்கெட் சலுகை

பெங்களூரு; பி.எம்.ஆர்.சி.எல்., நேற்று வெளியிட்ட அறிக்கை:குடியரசு தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்கா மலர் கண்காட்சியை காண செல்லும் பயணியர் வசதிக்காக, மெட்ரோ ரயில் இன்று ஒரு நாள் மட்டும், 30 ரூபாய் காகித டிக்கெட் வாங்கி பயணிக்கலாம்.காலை 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, எந்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கும், வெறும் 30 ரூபாய் டிக்கெட்டில் பயணிக்கலாம். காலை 8:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மெட்ரோ ரயில் நிலையங்களில், காகித டிக்கெட் கிடைக்கும்.குடியரசு தினத்தை முன்னிட்டு, பி.எம்.ஆர்.சி.எல்., அளித்துள்ள சலுகையை, பயணியர் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை