உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில் - மசூதி விவகாரத்தில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும் மோகன் பகவத் கருத்தில் வேறுபடுகிறது ஆர்.எஸ்.எஸ்.,

கோவில் - மசூதி விவகாரத்தில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும் மோகன் பகவத் கருத்தில் வேறுபடுகிறது ஆர்.எஸ்.எஸ்.,

புதுடில்லி 'கோவிலா - மசூதியா என்ற சர்ச்சையில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும். நாகரிக நீதி கிடைக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வார இதழான, 'ஆர்கனைசர்' கூறியுள்ளது. 'இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டாம்' என, அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ள நிலையில், அதற்கு முரணான கருத்தை இந்த இதழ் வலியுறுத்தியுள்ளது.

சர்ச்சை

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், 'கோவிலா - மசூதியா என்பது தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. 'நாம், நீண்ட காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, பலர் தங்களை ஹிந்துக்களின் தலைவர்களாக காட்டிக் கொள்வதற்காக இதுபோன்ற வழக்குகளை தொடர்கின்றனர். அதை ஏற்க முடியாது' என, கூறியிருந்தார்.இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 'ஆர்கனைசர்' வார இதழின் சமீபத்திய பதிப்பில், உ.பி.,யின் சம்பல் பகுதியில், ஸ்ரீ ஹரிஹர மந்திர் என்ற ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, ஜமா மஸ்ஜித் என்ற மசூதி கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.மேலும், மோகன் பகவத் கருத்து குறித்து எதையும் குறிப்பிடாமல், கோவில் - மசூதி சர்ச்சை தொடர்பான கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:சோம்நாத்தில் துவங்கி சம்பல் வரையும், அதற்கு அப்பாலும் உள்ள கோவில் - மசூதி சர்ச்சையில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் நாகரிகமான முறையில் நீதி கிடைக்க வேண்டும்.சம்பல் விவகாரத்தைத் தொடர்ந்து, தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் தொடர்பான விவாதம் துவங்கியுள்ளது.இந்த விவகாரங்களை, ஹிந்து - முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. நம் நாட்டின் வரலாறு, இதிகாசங்கள், சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.

போராட்டம்

சோம்நாத் முதல் சம்பல் வரை மற்றும் அதற்கு அப்பாலும் நடக்கும் போராட்டங்கள், ஹிந்து மதத்தின் ஆதிக்கத்தை காட்டுவதற்காக நடக்கவில்லை. வரலாற்று உண்மைகள் தெரிய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். நம் நாட்டின் அடையாளத்தை மீட்கவும், நாகரிகமான முறையில் நீதி கிடைக்கவும், இந்த போராட்டங்கள் நடக்கின்றன.இந்த சட்டப் போராட்டங்கள், இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இதை ஹிந்துக்களும், இந்திய முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். முகலாயர்கள் காலத்தில் நடந்த அட்டூழியங்களால், படையெடுப்புகளால், நம் நாட்டின் அடையாளம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன் வரை ஹிந்துக்களாக இருந்தவர்களே, தற்போதைய இந்திய முஸ்லிம்கள்.அதனால், முகலாயர்களின் படையெடுப்புகளால் நாம் அனைவரும் நம் நாட்டின் அடையாளத்தை இழந்துள்ளோம். நாடு பிரிவினையை சந்தித்தபோது, நம் நாடு, மதத்தின் அடிப்படையால் பிரிக்கப்பட்டது. இது அப்போது நடந்த பெரிய தவறாகும். முகலாயர்களின் கொடூரங்களை மறைத்து, அவர்களை பாராட்டும் வகையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் சித்தரித்தன. நாட்டின் வரலாறும் திருத்தப்பட்டு, திணிக்கப்பட்டது.அதனால், கோவிலா - மசூதியா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நம் நாட்டின் அடையாளத்துடன், பாரம்பரியத்துடன் தொடர்புடையது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

AMLA ASOKAN
டிச 27, 2024 15:26

RSS அமைப்பிற்கு கோவில் மசூதி விவகாரம் முக்கியமானதல்ல . ஹிந்து முஸ்லீம் வேற்றுமை நீடிக்கவேண்டும் என்பது தான் முக்கியம் . 75 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மீது கோரமான குண்டு போட்ட அமெரிக்காவுடன் கைகோர்த்து அந்நாடு மாபெரும் வளர்ச்சியடைந்து விட்டது . ஆனால் RSS இன்று வரை 500/600 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை முன்னிறுத்தி மத வெறியை வளர்த்துக் கொண்டிருக்கிறது . அடியில் தோண்டிக் கண்டுபிடிப்பதைவிட கட்டிடத்தை புல்டோசரால் இடிப்பது இலகுவானதும் , இந்து ஒற்றுமையையும் , முஸ்லீம் வெறுப்பையும் வளர்க்கும் யுக்தியாகவும் உள்ளது . வரலாற்று உண்மையை மறைத்து , வெறியை தூண்டும் கருத்தை சொல்லத் தெரியாத மோகன் பகவத் இன்று மாட்டிக்கொண்டு முழிக்கிறார் . அவரும் இன்னும் சில மாதத்தில் 75 வயது அடைந்து பதவி விலக உள்ளதால் மனசாட்சியுடன் பேசிவிட்டார் என தெரிகிறது .


Oviya Vijay
டிச 27, 2024 14:38

நீங்கள் மேலுலகம் சென்று அந்த காலத்தில் அந்த பகுதியில் வாழ்ந்த நபர்களை சந்தித்து உண்மையத் தெரிந்து கொள்ளுங்கள். பல தலைமுறைகளுக்கு முன் நடந்த சம்பவங்களுக்காக நிகழ்காலத்தில் உங்களைப் போன்றோரின் தூண்டுதல்களால் மக்கள் மத சண்டையிட்டுக் கொண்டு நிம்மதியிழந்து இருக்க வேண்டாம்.


ameen
டிச 27, 2024 12:45

கிறுஸ்துவர்கள் மீது கை வைத்தால் அமெரிக்கா குமட்டையிலயே குத்துவான் என்கிற பயம் தான் காரணம்..


Hnp Hnp
டிச 27, 2024 11:47

எல்லோரும் இஸ்லாமியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட கோவில்களை பற்றி மட்டும் புலம்புகிறோமே தவிர கிறிஸ்தவர்களால் ஆக்ரமிக்கப்பட்ட கோவில்களை மீட்கவேண்டும் ஏன் பிரச்சினை எழுப்புவதில்லை? தமிழ்நாட்டில் அன்னை வேளாங்கண்ணி கோவில், மைலாப்பூர் ஈஸ்வரன் கோயில், இப்படி எத்தனையோ உள்ளன. கிறிஸ்தவத்திற்கு இந்து கோவில்களை ஆக்ரமிக்கவும் கலாச்சாரத்தை அழிக்கவும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளதா?


பாரதி
டிச 27, 2024 10:41

அது மட்டும் போதாது... இந்த நாட்டின் எல்லா வரலாற்று உண்மைகளும் வெளிவர வேண்டும். உண்மைகள் ஏன் மறைக்கப்பட வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு உண்மையான வரலாற்றின் மேல் அறிவைப் பெறுவதில் உரிமை இருக்கிறது. அவர்கள் அதை அறிய தகுதி உள்ளவர்கள். அதை மறுப்பவன் அவர்களின் துரோகி. அழிக்கப்பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும்....


Sivagiri
டிச 27, 2024 09:01

இந்தியா , இந்திய மக்கள் , தங்கள் சொந்த மண் , பாரம்பரியம் , இதெல்லாம் வேண்டாம் என்றால் , சுதந்திரம் பெற்றியிருக்கவே வேண்டியதில்லை ,


Sampath Kumar
டிச 27, 2024 08:56

என்ன நீதி ?? உனக்குநீதி தெரிந்து எண்ணத்தை செய்தாய். ராமர் கோவில் விவகாரம் ஒன்னு போதும் உதாரணத்திற்கு நாட்டில் இங்கு உள்ள பிரச்சனை ஏராளம் அது குறித்து சிந்தித்து செயல்படும் எண்ணம் உங்க கும்ப ஆளிடம் இருக்கா ? இப்போ பாரு மதம் மதம் வெளிவேலு கம்மதேய மாதிரி இப்போ பாரு இட்லி தோசை என்று சொல்வது போல ஏந்த காட்டிலும் இல்லாத போக்கு இந்த நாட்டில் தான் உள்ளது உண்மையான தேச பகதர்கள் நாட்டின் வளர்ச்சியை தான் பார்ப்பார்கள் ஆனல் இந்து கும்பல் நாட்டில் கிளர்ச்சியை தான் விரும்பு கிறது இது நாட்டுக்கு நல்லது அல்ல


karthik
டிச 27, 2024 10:33

ஏன் சாமி அப்படி என்ன கிளர்ச்சியை பார்த்தீங்க? பங்களாதேஷ் பக்கம் கொஞ்சம் திரும்பி பாருங்க நம்ம மக்கள் அப்படி எதாவது செய்தார்களா? சிங்கப்பூர் தவிர மற்ற எல்லா நாடுகளும் தங்கள் கிறிஸ்டின் அல்லது முஸ்லீம் நாடகத்தான் பிரகடனம் செய்கிறார்கள் நம்ம நாட்லே ஹிந்து சொல்ல ஏன் இவ்ளோ வெக்கம் இல்லை இவ்ளோ ஏன் வெறுப்பு? உங்க ஒரு கருத்தை ஆமோதிக்கிறேன், எவ்ளோவோ ப்ரிச்சனைகள் இருக்கு இதற்கு இப்போ இவ்ளோ முக்கியம் கொடுக்க வேண்டுமா - இவ்ளோ வருடமாக நம்மளை பிரித்து அரசியல் செய்தார்கள், இப்போது தயவு செய்து முழித்து கொள்ளவேண்டும் .


Mettai* Tamil
டிச 27, 2024 10:35

கோவிலா - மசூதியா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நம் நாட்டின் அடையாளத்துடன், பாரம்பரியத்துடன் தொடர்புடையது. முகலாயகர்களின் படையெடுப்பின் நடந்த அட்டூழியங்களின் மூலம் நம் நாட்டின் அடையாளமும், பாரம்பரியமும் எவ்வாறு அழிக்கப் பட்டுள்ளது என்ற நம் நாட்டின் வரலாற்று உண்மைகள் அடுத்து வரும் தலைமுறைகள் தெரிந்துகொள்ளவேண்டும் ..


anantharaman
டிச 27, 2024 08:13

ஆர்கன் கட்டுரையின் உண்மை. போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்பதற்கு. பாகவத் இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசுவதால் RSS லிருந்து வெளியேறலாம். நம் நாட்டைச் கேவலப் படுத்தும் மதம் இஸ்லாம். வந்தே மாதரம் என்பது அவர்களுக்கு வேப்பங்காய். முஸ்லிம்கள் இல்லாத பார்த்தான் நாட்டைக் காக்கும்.


N.Purushothaman
டிச 27, 2024 07:48

அற்புதமான பதிவு ...வரலாறு அறியப்பட வேண்டும் .


Sakthi
டிச 27, 2024 07:22

மிக சரியான பதிவு. மத சார்பின்மை என்ற கொடிய விஷம் நாட்டை 60 ஆண்டுகள் சீரழித்து உள்ளது. முஸ்லிம்கள் வேறு முகலாயர்கள் வேறு என்று காங்கிரஸ் பாடம் படிக்க வைத்து உள்ளது. அதன் படி பார்த்தாலே முஸ்லிம்கள் முகலாயர்களின் உண்மையான வரலாற்றை படித்து தேசிய உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். மதம் என்னும் மூர்க்க சிந்தனையில் இருந்து வெளி வந்து நாடு முன்னேற சிந்திக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை