உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாக்பூரில் இன்று துவங்குகிறது ஆர்.எஸ்.எஸ்., முக்கிய கூட்டம்

நாக்பூரில் இன்று துவங்குகிறது ஆர்.எஸ்.எஸ்., முக்கிய கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டம் இன்று முதல், மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பொதுச்செயலர் சுனில் பன்சால், அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை 370 தொகுதிகளில் வெற்றி பெற வைப்பது; யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டத்தை நாடு முழுதும் அமல்படுத்துவது, விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் மற்றும் சந்தேஷ்காலி கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை கட்டிய பா.ஜ., அரசை பாராட்டி தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு முன், இந்த குழுவின் கூட்டம், 2018ல் நடந்தது குறிப்பிடத் தக்கது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Oviya Vijay
மார் 15, 2024 15:00

இந்தியாவில் அமைதியைக் கெடுக்கும் பிரதான கூட்டம் இது...


suresh
மார் 15, 2024 15:33

தீ க என்றோ , அமைதியானவர்கள் கூட்டம் என்றோ நினைத்து விடீர்கள் போல இருக்கிறது


Indian
மார் 15, 2024 10:53

டபுள் என்ஜின் வுக்கு அப்பு வெக்கப்போறதாகவும், பாஜக ஜெய்த்தால் யோகி ஆதித்யநாத் தான் அடுத்த பிரதமர் என்றும் ஒரு செய்தி,


suresh
மார் 15, 2024 11:21

ஆசை தோசை அப்பளம் வடை. இப்படி எல்லாம் வதந்தி பரப்பி, மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்க வேண்டாம் அமைதியாளரே. உங்கள் எண்ணம் எங்களுக்கு நன்கு தெரியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 15, 2024 11:59

ஆதித்யநாத் மத அடிப்படைவாதத்துக்கு ஆப்பு வைப்பதில் வல்லவர் .......


ஆரூர் ரங்
மார் 15, 2024 10:00

பிரதிநிதிகள் கூட்டத்தில் எப்போதுமே தேர்தல் அரசியல் பற்றி விவாதிப்பதில்லை. வெறும் ஊகங்கள்.


R. SUKUMAR CHEZHIAN
மார் 15, 2024 05:07

நடப்பது அகில இந்திய பிரதிநிதி சபா அல்ல அகில பாரத பிரதிநிதி சபா என்பதே சரி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை