உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்

புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்

புதுடில்லி: நாடு முழுதும், ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரவுள்ள நிலையில் அதில் உள்ள முக்கிய அம்சங்கள்புதிய சட்டங்களின் கீழ், போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக செல்லாமலேயே, மின்னணு தகவல் தொடர்பு வாயிலாக புகாரளிக்கலாம்.பூஜ்ய எப்.ஐ.ஆர்., அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக, ஒருவர் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம் வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும் புதிய சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து, தகவல்களை பதிவு செய்த இரு மாதங்களுக்குள் வழக்கு முடிக்கப்படுவதை உறுதி செய்கிறது சம்மன்களை மின்னணு முறையில் வழங்கலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க, சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய, அதிகபட்சம் இரு முறை வழக்குகளை நீதிமன்றம் ஒத்தி வைக்கலாம் பாலினம் என்பதன் வரையறை தற்போது திருநங்கையரை உள்ளடக்கியது பெண்கள், 15 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அல்லது கடுமையான நோய் உள்ளவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் இடத்தில் காவல் உதவியைப் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Balasubramanian
ஜூன் 27, 2024 11:07

இனி இபிகோ இந்தியன் சிவில் சட்டம் சாட்சிகள் சட்டம் எல்லாம் உதவாது! BNS, BNSS, BSS தான்! யுவர் ஆனர் கிடையாது! மாண்புமிகு நீதிபதி அவர்களே தான்! என்றென்றும் நீதி வெல்ல வேண்டும்! சத்தியம் ஏவ ஜெயதே! வாய்மையே வெல்லட்டும்! வாழ்த்துக்கள்


N Sasikumar Yadhav
ஜூன் 27, 2024 10:49

இரண்டு முறை வழக்கு ஒத்தி வைத்தல் விரைவான தீர்ப்பு இதுதான் திராவிட மாடல் சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிற காரணத்தால் இந்த சட்டத்தை எதிர்த்து மத்தியரசுக்கு கடிதம் எழுதுகிறாரு திராவிட மாடல் மொதல்வரு


G.Kirubakaran
ஜூன் 27, 2024 10:48

வழக்குகளை விரைந்து முடித்தல், பத்தி குற்றங்கள் குறையும்


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 10:30

Judicial Reforms என்பது ப ஜா க கொள்கை செயல்திட்டத்தில் உள்ளது ....பூனாவில் நடுராத்திரி குடித்து விட்டு வண்டி ஒட்டி ரெண்டு பேர் கார் மோதி மரணம் ....குடித்து விட்டு வண்டி ஒட்டியவனுக்கு ஒரே நாளில் ஜாமின் வழங்கியது நீதி மன்றம் ....வண்டி ஒட்டியவன் ரத்த மாதிரி கூட ஆஸ்பத்திரியில் மாற்றி வைத்து அவன் குடிக்கவில்லை என்று சான்று கொடுத்தார்கள் ....இது போன்ற அக்கிரமங்கள் நடக்கும் நாடு இது ....இந்த சட்டங்களை எல்லாம் காங்கிரஸ் ஒரு நாளும் மாற்றாது ....சமூக நீதி மத சார்பின்மையாக விடியல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ....


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 10:20

சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும்.. இது போன்ற சட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தனும் ....இங்கு போஸ்கோ சட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கைதாவது தொடர்கதை.. ஆனால் இந்த சட்டங்கள் உருது மொழியில் இல்லாமல் இவை சமஸ்க்ரித பெயரில் உள்ளது என்று விடியல் திராவிடனுங்க தமிழ் நாட்டில் இந்த சட்டங்களை அமல்படுத்த மாட்டார்கள் .....


subramanian
ஜூன் 27, 2024 13:09

நாடு முழுமையாக சட்டம். மாநிலங்களுக்கு எந்த விதிவிலக்கு இல்லை.


Lion Drsekar
ஜூன் 27, 2024 09:58

இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே தீர்வு . வந்தே மாதரம்


Ramesh Sundram
ஜூன் 27, 2024 11:25

தண்டனைகளுக்கு இஸ்லாமிய shariat சட்டம் தான் நல்லது அம்பேத்கார் எழுதிய சட்டம் நல்லவர்களுக்கு ஆனால் இப்பொழுது காவல் துறை முதல் நீதி துறை வரை ஒருவர் கூட நல்லவர் கிடையாது உதாரணம் புனே சிறுவன் இருவரை குடி போதையில் கார் ஒட்டி கொலை செய்தான் அவனுக்கு 300 வரிகளில் கட்டுரை எழுத சொன்ன சிறார் நீதி மன்றம் மற்றும் ரத்த மாதிரியில் alcohol இல்லை என்று திருட்டு certificate வழங்கிய டாக்டர் அந்த டாக்டர்களை நிர்பந்தித்த ஒரு MLA ஆளுங்கட்சி வேறு கேஜ்ரிவாலிற்க்கே ஜாமின் கொடுத்த நீதி அரசர்கள் இருக்கிறார்கள் நமது நாட்டில்


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 11:31

முத்தலாக்கா? தலிபான்கள் வழியில்?


mathan
ஜூன் 27, 2024 09:39

மிக்க சிறப்பு ....


Swaminathan L
ஜூன் 27, 2024 09:37

நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எவ்வளவு காலம் என்பதை பாராளுமன்றம் நிர்ணயிக்க முடியாது. எனவே, எத்தனை காலம் வழக்கு விசாரணை என்பது நீதிமன்றங்களுக்கே வெளிச்சம். இளங்குற்றவாளிகள், அவர்கள் எவ்வளவு இளம்வயதினராயிருந்தாலும் குற்றத்தின் தன்மையை வைத்து அவர்களுக்கும் தயவு தாட்சண்யம் காட்டாமல் உச்சபட்ச தண்டனை வழங்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். கூட்டு பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை, சிறார்களாகக் கருதுவது நீதிக்கு இழுக்கு.


prathab
ஜூன் 27, 2024 09:32

நல்லது இவனுங்க FIR போட மாட்டானுங்க பாதி கேஸ்ல கமிஷன் இனி அப்படியெல்லாம் பண்ண முடியாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ