உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம் பிட்ரோடாவின் கருத்து அருவருப்பானவை: கொதிக்கும் பா.ஜ.,வினர்

சாம் பிட்ரோடாவின் கருத்து அருவருப்பானவை: கொதிக்கும் பா.ஜ.,வினர்

புதுடில்லி: இந்தியர்களை சீனர்கள், ஆப்ரிக்கர்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்., அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடாவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அருவருப்பானவை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ''இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களை போலவும் தோற்றமளிக்கின்றனர். இந்தியாவை போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்'' எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அண்ணாமலை

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் தேசம் என்றும், நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. இந்தியர்களை, ஆப்ரிக்கர் அல்லது சீனர்களைப் போல் பார்ப்பதில் தவறில்லை. நாம் இவர்களின் (சீனர்கள், ஆப்ரிக்கர்களின்) வழித்தோன்றல்கள் தான், 'பாரதியன்' அல்ல என்பதே சாம் பிட்ரோடா சொல்லும் பொருள். நாட்டிற்கு வெளியே எஜமானர்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே, இதுபோன்று சொல்ல முடியும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அருவருப்பாகவும் இருக்கிறது. இது காங்கிரஸின் மனநிலையையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அனுராக் தாக்கூர்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: எத்தனை முறைதான் நீங்கள் (சாம் பிட்ரோடா) இந்தியர்களை அவமதிப்பீர்கள்? இதைவிட பெரிய இனவாத கருத்து இருக்கிறதா? சாதி, பிராந்தியத்தின் பெயரால் நாட்டை எவ்வளவுதான் பிளவுப்படுத்துவீர்கள்? இதை நாடு ஏற்காது. காங்கிரஸின் கேவலமான முகம் இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பியூஷ் கோயல்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ''இது வெட்கக்கேடானது. நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்குத் தலைவர்களோ, தலைமையோ, கொள்கைகளோ, நோக்கங்களோ இல்லை. முழுமையாக மனமுடைந்து போன காங்கிரசுக்கு கடந்த முறை கிடைத்த இடங்களை விட பாதிதான் கிடைக்கும். எனவே, இதுபோன்ற சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வேறு எந்த யுக்தியும் அவர்களிடம் இல்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SRINIVASAN V
மே 08, 2024 22:56

பிஜேபி STAR CAMPAIGNER FOR THIS ELECTION SAM PITRODA?


Ramesh Sargam
மே 08, 2024 19:56

சாம் பிட்ரோடாவின் கருத்து மிகவும், மிக மிக மிகவும் மோசமான, கீழ்த்தரமான பேச்சு தண்டிக்கப்படவேண்டும்


V RAMASWAMY
மே 08, 2024 17:36

இம்மாதிரியொரு அவலமான அவமான கருத்தை அனைத்து இந்திய மக்களும் கட்சி வேறுபாடின்றி, மாநில வேறுபாடின்றி எதிர்க்கவேண்டும் நீதித்துறை தானே முன்வந்து இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எதற்கும் ஒரு எல்லைக்கோடு உண்டு


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி