உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் ஊழல்: புரோக்கருக்கு ஜாமின்

ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் ஊழல்: புரோக்கருக்கு ஜாமின்

புதுடில்லி : வி.வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கும் 3,600 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்ஜேம்சுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கடந்த 2010ல், வி.வி.ஐ.பி.,க்களுக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் போட்டது. இதில், 423 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக 2013ல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிந்து பலரை கைது செய்தனர். அடுத்து அமைந்த பா.ஜ., அரசு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.மேலும், அந்நிறுவனம் சார்பில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் மீதும், சி.பி.ஐ., 2016ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.துபாயில் தங்கியிருந்த மைக்கேல், மத்திய அரசின் முயற்சியால் கடந்த 2018 டிசம்பரில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த அவருக்கு டில்லி உயர் நீதிமன்றம் தொடர்ந்து ஜாமின் மறுத்து வந்தது.இந்நிலையில், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ராம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா, மைக்கேல் ஆறு ஆண்டுகளாக சிறையில் இருப்பதாலும், விசாரணை இன்னமும் முடிவடையாததாலும், ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Chandradas Appavoo
பிப் 19, 2025 14:06

மழுப்பதே.


Ramesh Sargam
பிப் 19, 2025 12:27

2010 ஆம் வருடம் நடந்த ஒரு உலகமகா ஊழல். ஆனால் இன்றுவரை, அதாவது 15 ஆண்டுகள் ஆனபின்பும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இன்றுவரை வழக்கு முடிவுக்கு வராமல், தீர்ப்பு கொடுக்கப்படாமல், ஜாமீன் ஜாமீன் கொடுத்தே வழக்கு செல்கிறது. மெச்சுகிறேன் நமது நீதிமன்றங்களின் பணியை.


Anand
பிப் 19, 2025 10:39

உச்சநீதிமன்றத்தை கலைத்துவிடுங்கள்....


Ray
பிப் 19, 2025 12:40

மத்திய முந்திரிகள் சொல்வதே தீர்ப்பு என்று சட்டம் போட்டுவிடலாம்


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2025 09:35

சொக்கத்தங்கம் இந்த ஊழல் வழக்கில் எப்போதோ சிறை சென்றிருக்க வேண்டியவர்...


Iniyan
பிப் 19, 2025 09:18

தேச விரோத நீதி மன்றங்கள் உடனே கலைக்க பட வேண்டும்


Kalyanaraman
பிப் 19, 2025 08:16

, கடுமையற்ற தண்டனைகள் இதுவே குற்றவாளிகளை குற்றம் செய்ய மேலும் மேலும் ஊக்குவிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.


Priyan Vadanad
பிப் 19, 2025 07:28

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தமா இது? இதுவரை விசாரணை என்கிற போர்வையில் உண்டு கொழுத்த அதிகாரிகளை என்ன சொல்வது? ஒருவேளை ஊழல் ஒப்பந்தம் என்பது பொய்யான குற்றச்சாட்டாக இருக்குமோ அல்லது ஒப்பந்த தரகருக்கு வேறு ஒப்பந்தம் போட்டு தரகர் வேலை கொடுத்து பணம் பார்க்கலாம் என்கிற திட்டமோ?


naranam
பிப் 19, 2025 07:16

குற்றம் செய்தவர்கள் சிறையிலிருப்பது தானே நியாயம். விசாரணையைத் தாமதப் படுத்தியவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். அதை விடுத்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்குவது தவறான நீதியாகும்.


Dharmavaan
பிப் 19, 2025 07:10

நாட்டை கெடுப்பது கிருமினல்களுக்கு பரிவு காட்டும உச்சை நீதி தேச விரோதியாய் இருக்கிறது கேவலம் 6 வருடமே இருந்து விட்டால் ஜாமீன் கட்டாயமா என்ன நீதி இது திருடனுக்கு கேட்பாரில்லை


Thiyagarajan S
பிப் 19, 2025 06:58

பைத்தியக்கார பப்பு வுக்கு வெற்றி....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை