உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்திட்டத்தில் ஊழல்: தெலுங்கானா மாஜி முதல்வருக்கு நோட்டீஸ்

மின்திட்டத்தில் ஊழல்: தெலுங்கானா மாஜி முதல்வருக்கு நோட்டீஸ்

ஐதராபாத்: தெலுங்கானாவில் முந்தைய ஆட்சியில் மின்திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவிற்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தெலுங்கானாவில் முந்தைய பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வராக சந்திரசேகரராவ் இருந்தார். அப்போது சத்தீஷ்கர் மாநிலத்திடமிருந்து மின்சாரம் விலைக்கு வாங்கியது தொடர்பாக போடப்பட்ட மின் திட்டத்தில் பல்வேறு முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. தற்போது தெலுங்கானாவில் காங். ஆட்சி நடக்கிறது. முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி கே.எல். நரசி்மமரெட்டி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ், 25 அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வரும் 15-ம் தேதி விசாரணை கமிஷன் முன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 12, 2024 08:05

இனிக்க இனிக்க பேசி கேவலமாக நடந்து கொள்வதில் இவருக்கு இணை வேறு ஒருவரை கண்டுபிடிப்பது சிரமம்.


va.sri.nrusimaan srinivasan
ஜூன் 12, 2024 07:06

transfer all cases to TN request to b made. All bribe cases will b dismissed.


sankaranarayanan
ஜூன் 12, 2024 04:32

செஞ்ச அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா புடிச்சு உள்ளே போடுங்கப்பா பொண்ணை உள்ளெ போட்டாச்சு இனி அப்பனையும் உள்ளே போடு இது அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஓர் எச்சரிக்கத்தான் முன் உதாரணம் இனியாவது நாட்டில் அவர்கள் செய்யும் அட்டூழுயம் இனி அழியும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி