வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமைடா தம்பி உன்னுடைய துணிச்சலுக்கு பாராட்டுக்கள்
பாலக்காடு: பாலக்காடு அருகே, எட்டாம் வகுப்பு மாணவனின் துணிச்சலான செயலால், 2 வயது சிறுமி உயிர் காக்கப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், துாதாவைச் சேர்ந்த அனில்- -- உமா தம்பதியின் மகன் அமல்கிருஷ்ணா, 13; மலப்புரம் மாவட்டம், வளாஞ்சேரி வைக்கத்துாரில் பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். அக்., 22ம் தேதி பள்ளி விடுமுறையை முன்னிட்டு, வீட்டின் அருகே உள்ள ஓடைக்கு அமல்கிருஷ்ணா நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பைசல் - ஹஸ்மா தம்பதியின் 2 வயது மகள் பாத்திமா தில்ஷா, ஓடையில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டாள். இதை பார்த்த அமல்கிருஷ்ணா, துணிச்சலுடன் ஓடையில் குதித்து சிறுமியை மீட்டு, வாயில் சுவாசம் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தார். தக்க நேரத்தில் நீரில் இருந்து மீட்டு, முதலுதவி அளித்து காப்பாற்றினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமி, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். சிறுமியை காப்பாற்றிய அமல்கிருஷ்ணாவை அப்பகுதி மக்கள் பாராட்டினர். அமல்கிருஷ்ணா கூறுகையில், “பள்ளியில் ஜே.ஆர்.சி., எனும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி கொடுத்தனர். எனக்கு நீச்சல் தெரியும் என்பதால், சிறுமியை மீட்டு, பயிற்சி பெற்றவாறு முதலுதவி செய்ததால், உயிரை காப்பாற்ற முடிந்தது,” என்றார்.
அருமைடா தம்பி உன்னுடைய துணிச்சலுக்கு பாராட்டுக்கள்