உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடர் தோல்வி: பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?

தொடர் தோல்வி: பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா, தேர்தல் வியூக நிபுணரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த அக்கட்சி, கடைசியாக பீஹார் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. இத்தேர்தலில் ராகுல் எழுப்பிய ஓட்டுத் திருட்டு, எஸ்ஐஆர் விவகாரம் உள்ளிட்டவை எதுவும் எதிரொலிக்கவில்லை. அதேபோல், பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரும், பீஹாரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜன் சுராஜ் கட்சி என தனிக்கட்சி துவக்கினார். நடைபயணம், பிரசாரம், தேர்தல் வியூகம் என அவரின் எந்த திட்டமும் இந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை. அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தது.இச்சூழ்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு, டில்லியில் சோனியாவின் இல்லத்தில் பிரியங்காவும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இரு தரப்பும் இது குறித்து உறுதிபடுத்தவில்லை. பிரியங்கா கூறும்போது, நான் யாரை சந்திக்க விரும்புகிறேன் அல்லது சந்திக்கவிரும்பவில்லை என்பதை தெரிந்து கொள்ள யாருக்கும் ஆர்வம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.இருவரும் சந்திப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2022ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பது தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காங்கிரசில் அவர் சேர்வதாக இருந்தது.காங்கிரசை சீரமைப்பது குறித்து சோனியாவிடம் அறிக்கை ஒன்றை பிரசாந்த் கிஷோர் அளித்து இருந்தார். இது குறித்து ஆராயவும், கட்சி சந்திக்கும் சவாலை சரி செய்வது குறித்தும் குழு ஒன்றை அமைப்பதாக சோனியா தெரிவித்து இருந்தார். இந்த குழுவில் இடம்பெற பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால், பேச்சுவார்த்தை நின்று போனது. காங்கிரஸ் கட்சியில் சேரும் எண்ணத்தை பிரசாந்த் கிஷோர் கைவிட்டார். பீஹார் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்து வரும் பிரசாந்த் கிஷோர், டில்லியில் பிரியங்காவை சந்தித்து பேசியதாக வெளியான தகவல், இரு கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Velan Iyengaar,Sydney
டிச 16, 2025 10:00

ஆரியர் ஆரியனை சார்ந்து இருக்கும்.


theruvasagan
டிச 16, 2025 10:11

ஒரு சாதி மீதான வன்மம் உனக்கு இன்னும் போகவில்லையா. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அந்த வடக்கன் ஆரியனிடம் திராவிடம் மன்றாடி வெற்றி பெற வழி கேட்டது மறந்து போச்சா. அதை விடவா இது கேவலம்.


KOVAIKARAN
டிச 16, 2025 06:56

ICCU Intensive Cardiac Care Unit ல் கோமாவில் இருக்கும் காங்கிரசை எழுப்பி குணப்படுத்த இனிமேழும் யாராலும் முடியாது. அது ஏற்கனவே செயலற்ற இருதயநோயாளி. ராகுல் பப்புவின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை, இந்த பிரசாந்த் கிஷோர் தந்திரங்கள் மட்டுமல்ல வேறு யாருடைய தந்திர மந்திரங்களெல்லாம் இனிமேல் அவர்கள் விஷயத்தில் ஒன்றும் பலிக்காது.


SUBBU,MADURAI
டிச 16, 2025 06:19

இந்த பிரசாந்த் கிஷோர் Deep state ன் கை கூலி


Kasimani Baskaran
டிச 16, 2025 04:05

ஓவரான திமிர் பேச்சை வைத்துக்கொண்டு பொது மக்களை அணுகுவது நேரு குடும்ப அடிப்படை பிரச்சினை. அதை ஆயிரம் கிஷோர்கள் வந்தாலும் சரி செய்ய முடியாது.


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2025 22:34

கிஷோர் ஏற்கனவே sixty பெர்சென்ட் செந்தில் , ஆதவ் எல்லாம் தமிழகத்தில் கணக்கிட்டு இருக்காங்க , நீங்க வேற புதுசா ?


Chandhra Mouleeswaran MK
டிச 15, 2025 22:24

இனிப் பாருங்க பாரத அரசியலில் புயல் அடிக்கும் பூகம்பம் வெடிக்கும் புர்ர்ர்ர்ர்ரச்சி கொதிக்கும் புண்ணாக்கு மணக்கும்: ஒன்ன நம்பி நாங்கெட்டேன் என்னெ நம்பி நீ கெட்டாய் என்று கட்டி அழுகிறாள்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை