உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  அடுத்தடுத்து கூட்டத்தை புறக்கணிக்கும் சசி தரூர்; காங்., மேலிடம் அப்செட்

 அடுத்தடுத்து கூட்டத்தை புறக்கணிக்கும் சசி தரூர்; காங்., மேலிடம் அப்செட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்., மூத்த தலைவர் சசி தரூர், கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், குளிர் கால கூட்டத்தொடர் குறித்து அக்கட்சியின் பார்லி., குழு தலைவர் சோனியா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. காங்., மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர், 69, சமீப காலமாகவே பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.,வையும் புகழ்ந்து வருகிறார். இதுதவிர, கேரள காங்., தலைவர்களிடமும் அவர் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது, காங்., மேலிடத்தை எரிச்சலடைய செய்துள்ளது. பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், அது குறித்து விவாதிக்க, பார்லி., - காங்., குழு தலைவர் சோனியா தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், சசி தரூர் பங்கேற்கவில்லை. இதற்கு விளக்கம் அளித்த சசி தரூர், ''கூட்டத்தை நான் புறக்கணிக்க வில்லை. கேரளாவில் இருந்து விமானத்தில் வந்து கொண்டிரு ந்தேன் அதனால் பங்கேற்கவில்லை,'' என்றார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, கடந்த 18ல், காங்., மேலிடம் நடத்திய கூட்டத்தையும், உடல்நிலை சரியில்லை எனக் கூறி அவர் தவிர்த்தார். அதே சமயம், அதற்கு முந்தைய நாள், டில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் சசி தரூர் பங்கேற்றதோடு மட்டுமின்றி, அவரை புகழ்ந்தும் தள்ளினார். காங்., கூட்டங்களை தொடர்ச்சியாக சசி தரூர் புறக்கணித்து வருவது, அக்கட்சி மேலிடத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ