உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எத்தனால் கலந்த பெட்ரோலால் எந்த பிரச்னையும் இல்லை; ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்: சவால் விட்டார் நிதின் கட்கரி!

எத்தனால் கலந்த பெட்ரோலால் எந்த பிரச்னையும் இல்லை; ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்: சவால் விட்டார் நிதின் கட்கரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனத்துக்கு பாதிப்பு என்று எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்,'' என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சவால் விட்டுச்சொன்னார்.இது தொடர்பாக, தனியார் செய்தி சேனல் நடத்திய மாநாட்டில் நிதின் கட்கரி பேசியதாவது: பெட்ரோலில் எத்தனால் கலக்கும், அரசின் திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jobdls1m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாதாரணமாக வாகனங்களுக்கு ஏற்படும் பிரச்னையை கூட, இதுதான் காரணம் என விமர்சனம் செய்யப்படுகிறது.பெட்ரோலில் எத்தனால் கலப்பதால், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறைகிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை இலக்குகளை ஆதரிக்கிறது. இந்த திட்டத்தால் பொருளாதாரம் மேம்படுகிறது.

வருமான வாய்ப்பு

எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்கும் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சோளம் குவிண்டாலுக்கு ரூ.1,200க்கு விற்கப்பட்டது. இப்போது அது எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது. தற்போது, ஒரு குவிண்டால் ரூ.2,600 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கிராமப்புற விவசாய வருமானத்திற்கு நேரடியாக பயனளிக்கிறது. இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !