உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா அழைத்து வரப்பட்ட சோமாலியா கொள்ளையர்கள்

இந்தியா அழைத்து வரப்பட்ட சோமாலியா கொள்ளையர்கள்

புதுடில்லி :இந்திய பெருங்கடல் பகுதியில், நம் கடற்படையினரிடம் சரணடைந்த சோமாலியா நாட்டு கடற்கொள்ளையர்கள் 35 பேர், விசாரணைக்காக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியா அருகே மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்வி ரூயன் என்ற சரக்கு கப்பல் சென்றது.இதை, சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடந்த ஆண்டு டிச., 14ல் கடத்தினர். அந்த கப்பலில் இருந்த 17 பணியாளர்களை சிறை பிடித்தனர். அதன் பின், கடற்கொள்ளையில் ஈடுபட அந்த கப்பலை பயன்படுத்தி வந்தனர். கடந்த 16ம் தேதி அந்த கப்பலை நம் கடற்படையினர் மடக்கினர். அப்போது, நம் கடற்படைக்கு சொந்தமான, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானத்தை கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தினர்.மேலும் நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., கோல்கட்டா போர்க்கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதை தொடர்ந்து 40 மணி நேரம் நடந்த சண்டையின் இறுதியில், அந்த கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த நம் வீரர்கள், கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். கொள்ளையர்களின் பிடியில் இருந்த பல்கேரியா, அங்கோலா மற்றும் மியான்மர் நாட்டை சேர்ந்த கப்பல் பணியாளர்களை விடுவித்தனர். கைது செய்யப்பட்ட, சோமாலியா நாட்டை சேர்ந்த 35 கடற்கொள்ளையர்களை விசாரணைக்காக நம் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.வழக்கமாக இதுபோன்ற நடவடிக்கைகளின் போது, கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்ட பின், அவர்களால் மற்ற கப்பல்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்த பின், அவர்களை விடுவிப்பது வழக்கம்.ஆனால், இவர்கள் நம் கடற்படை ட்ரோன் மற்றும் போர்க் கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதுடன், நம் வீரர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திய காரணத்தால், அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து, அவர்களை இந்தியா அழைத்து வந்துள்ளதாக நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

rkbiran
மார் 21, 2024 18:22

எங்கள் டாஸ்மாக் ராஜா அவர்களுக்கு மதுபானம் தந்து சந்தோஷபடுத்துவார்


jayvee
மார் 19, 2024 20:08

இப்படி இருக்க சீன சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு ஆயுதம் வழங்கவும் முயற்சி செய்யும்..


karthik
மார் 19, 2024 12:27

இது சாதாரண விஷயம் இல்லை..இந்தியாவின் பலம் உலக அளவில் உயர்ந்து வருவதை காட்டுகிறது..நமது வீரர்கள் உலக அளவில் உயர்ந்து நிற்கின்றார்கள்.


Anand
மார் 19, 2024 12:25

வெறும் பரோட்டாவை மட்டும் கொடுங்கள்.......


தஞ்சை மன்னர்
மார் 19, 2024 11:31

ஹி ஹி


செல்வம்
மார் 21, 2024 08:44

அதிர்ச்சில மூள கலங்கி போச்சா


Pandi Muni
மார் 19, 2024 09:15

சிறைச்சாலைகளில் சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும்.


தமிழ்வேள்
மார் 19, 2024 12:31

வாரத்துக்கு அரை கிலோ அரிசி சோறு , தினமும் அரை லிட்டர் தண்ணீர் மட்டும் போதுமானது ..அடிஉதை வஞ்சனையின்றி தரலாம் ..கொழுப்பு அடங்கும் ...


வெகுளி
மார் 19, 2024 07:48

அயலக பிரிவில் சேர தகுதியுள்ள 35 செயல்வீரர்களை கழகம் அன்போடு அழைக்கிறது...


NicoleThomson
மார் 19, 2024 07:07

அவர்களின் உறவினர்களான தமிழக கார்பொரேட் குடும்பத்தின் உறுப்பினர்களை எப்படி பிடிப்பீங்க ?


visu
மார் 19, 2024 06:43

வெள்ளையர்கள் காலம் போல இவர்களுக்கு கடுமையான வேலைகளை வழங்கலாம் சும்மா சாப்பாடு போட்டால் வேஸ்ட் இல்லை அவங்க ஊருக்கே துரத்தி விட்டுருக்கணும்


Ramesh Sargam
மார் 19, 2024 05:23

இந்தியாவிலேயே காங்கிரஸ் கொள்ளையர்கள், திமுக கொள்ளையர்கள் அதிகம் இருக்கும்போது, ஏன் அவர்களை வேறு இங்கே அழைத்துவருகிறீர்கள். மக்கள் வரிப்பணத்தை இப்படி எல்லாம் வீண் செலவு செய்யக்கூடாது தெரியுமா?


Senthoora
மார் 19, 2024 05:51

அப்பதானே, இங்க கட்சியும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழலாம், டூர் போகலாம்,


Shekar
மார் 19, 2024 07:47

துபாய், ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் டூர் போறததானே சொல்றீங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை