உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேக கட்டுப்பாட்டு கருவி டில்லி அரசு புது உத்தரவு

வேக கட்டுப்பாட்டு கருவி டில்லி அரசு புது உத்தரவு

புதுடில்லி:'வணிக வாகனங்களில், 'ஸ்பீட் கவர்னர்' எனப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருப்பதற்கான சான்றிதழ் இனி சமர்ப்பிக்க வேண்டாம், என, டில்லி அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து டில்லி அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:டில்லி அரசு, கடந்த 2015ம் ஆண்டு அக்.,1க்கு முன் பதிவு செய்யப்பட்ட இலகுரக பயணியர் வாகனங்கள் உட்பட வணிகப் போக்குவரத்து வாகனங்களில், 'ஸ்பீட் கவர்னர்' என்ற வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என, 2018ல் டில்லி அரசு அறிவித்தது. அதேபோல, அதிகபட்ச வேகம் மணிக்கு, 80 கி.மீ., வேகத்தை தாண்டக் கூடாது எனவும் உத்தரவிட்டு இருந்தது.மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் -1989லும், 2015ம் ஆண்டு அக்., 1 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ தயாரிக்கப்பட்ட வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அதேநேரத்தில், வேகக் கட்டுப்பாடுக் கருவி பொருத்துவது தொடர்பான அறிவிப்பில், அக். 1, 2015க்குப் பின் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில், உற்பத்தியாளரே வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த, மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதால், அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை. வாகனத்தை பதிவு செய்யும் போதே அது சரிபார்க்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ