உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை கோலாகலமாக துவங்குகிறது கும்பமேளா கொண்டாட்டம்: விரதம் இருந்து பங்கேற்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

நாளை கோலாகலமாக துவங்குகிறது கும்பமேளா கொண்டாட்டம்: விரதம் இருந்து பங்கேற்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

புதுடில்லி: ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் பிரயாக்ராஜில் நாளை (ஜன.,13) முதல் நடக்க உள்ள மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், இந்தாண்டு மகா கும்பமேளா நாளை ஜன., 13ம் தேதி முதல் பிப்.,26ம் தேதியுடன் (மஹாசிவராத்திரி) முடிவடைகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால், கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மகா கும்பமேளா, தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. கும்பமேளா நடைப்பெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.இந்நிலையில், ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் லாரன் பாவெல் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார். நாளை கோலாகலமாக துவங்கும் கும்பமேளா நிகழ்ச்சியில் லாரன் பாவெல் பங்கேற்கிறார். அவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்; குறிப்பாக கல்பவாசம் மேற்கொள்ள உள்ளார். கல்பவாசம் என்பது, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விரதமாகும். இதை கடைப்பிடிப்பவர்கள், புனித கங்கையில் தினமும் நீராடி, விரதம் இருந்து வழிபாடு நடத்துவர்.திரிவேணி சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் மட்டுமே தங்குவர்; ஆன்மிகம் தொடர்பான நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Mario
ஜன 16, 2025 22:22

கும்பமேளா நிகழ்ச்சியிலிருந்து புறப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி வந்ததுக்கு அலர்ஜிதான் மிச்சம்


Karthik
ஜன 12, 2025 15:52

சரியாகச் சொன்னீர்.. நூத்துல ஒரு வார்த்தை.... அடிச்சா மாதிரி.


Barakat Ali
ஜன 12, 2025 13:59

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கிறித்தவனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் ..... இப்படியெல்லாம் சொன்ன உதயநிதி அவரிடம் சென்று ஸநாதனம் வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வாரா ????


M Ramachandran
ஜன 12, 2025 13:47

அயல் ஆட்டினருக்கு இருக்கும் பக்தி கூட இங்குஇருக்கும் தமிழர்களுக்கு இல்லை. புத்தியை மழுங்க வைத்து அறுவடை செய்யும் கூட்டம். அதற்க்கு காரணம் ...


தமிழன்
ஜன 12, 2025 15:01

இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சிக்கு பயந்து வெளியே தலை காட்ட முடியவில்லை


சண்முகம்
ஜன 12, 2025 12:55

Empty ritual.


Ramesh Sargam
ஜன 12, 2025 11:56

ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் அவர்களை நாம் ஹிந்துக்கள் வற்புறுத்தினோமா இப்படி விரதம் இருந்து கும்பமேளா விழாவில் பங்கேற்கவேண்டும் என்று. அவராக யார் வற்புறுத்தலும் இன்றி அதை செய்கிறார். அதுதான் சனாதன தர்மம். இதைப்புரியாத ஒரு சில அறிவிழந்தவர்கள் சனாதானத்தை ஏதிக்கிறார்கள் நம் நாட்டில். லாரன் பாவெல் எந்தக்குறையுமின்றி, நோய்நொடி எதுவுமில்லாமல் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ அந்த சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.


R. SUKUMAR CHEZHIAN
ஜன 12, 2025 10:06

சனாதன தர்மம் ஓங்குக, என்னை சனாதனியாக படைத்த அந்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள். சனாதன தர்மம் உலகத்தை வழிநடத்தும். உலகில் அமைதி நிலவட்டும். ?


Minimole P C
ஜன 12, 2025 08:56

Great. Sanatan will attract very sincere people who takes religion is a must for purity in life.


Sampath Kumar
ஜன 12, 2025 08:53

நல்ல உருட்டு ஆனால் ஏடுபடாது


N Sasikumar Yadhav
ஜன 12, 2025 10:47

உங்கள மாதிரியான ஆட்களுக்கு ஆன்மீகத்தை பற்றி தெரியாது . அதனால் எப்போதும்போல உங்க திராவிட எஜமானுக்கு சொம்படிங்க திமுக ஆதரவாளரான பாலியல் குற்றவாளிக்கு முட்டு கொடுங்க


Ramamoorthy M
ஜன 12, 2025 10:50

வழக்கம் போல் புத்தகப் புழுக்கள் கதறி அழும். தன் இனத்தையும் பிற இனத்தையும் அழிக்க மட்டுமே தெரிந்த இனம்.


Duruvesan
ஜன 12, 2025 12:08

உனக்கு ஏன் எரியுது?


Barakat Ali
ஜன 12, 2025 14:02

செய்தி பல நாளேடுகளில் வந்துள்ளது .... இதில் உருட்ட என்ன உள்ளது ???.


Kasimani Baskaran
ஜன 12, 2025 14:34

கும்ப மேளாவை நக்கல் செய்யும் இதுகள் கூவத்தில் கூட குளித்து இன்புறும்..


jss
ஜன 12, 2025 15:55

நீ எடுபட்ட பய அதனாலதான் இவ்வாறு கூறுகிறாய்?


ராமகிருஷ்ணன்
ஜன 12, 2025 08:39

இப்படி வெளிநாட்டு மக்கள் இந்திய கலாசாரம், பக்தி, விரதம் என்று உலகமயமானால் நம்ம திராவிட கும்பலுக்கு பொருக்குமா, அவர்களின் இந்து விரோத உருட்டுகள், சனாதன எதிர்ப்பு எல்லாம் கோயிந்நா ஆயிடுமே.


சமீபத்திய செய்தி