உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புயல், மழை, வெள்ளம்; துல்லியமாக கணிக்கும் செயற்கைக்கோள்!: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

புயல், மழை, வெள்ளம்; துல்லியமாக கணிக்கும் செயற்கைக்கோள்!: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆந்திரா: 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோள் புயல், மழை, வெள்ளத்தை துல்லியமாக கணிக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ. இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட். ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையில் உள்ள செங்காளம்மா கோயிலில் தரிசனம் செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது: வானிலை ஆய்வுக்காக இன்சாட்-3டிஎஸ் என்ற வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் புவி அறிவியல் அமைச்சகத்திற்காக உருவாக்கப்பட்டது. இன்சாட் வரிசை செயற்கைக்கோள்களில் இது மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். புயல், மழை, வெள்ளத்தை துல்லியாமாக கணிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
பிப் 18, 2024 00:26

முதலில் வாழ்த்துக்கள். செயற்கைக்கோளின் கணிப்பை உடனுக்குடன் தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தவும். அப்பதான் அவர் அடுத்த பேரிடர் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார். போன பேரிடரின்போது நீங்கள் சரியாக கணித்து சொல்லாததால்தான் தமிழகம் பெரும் விபரீதத்தை சந்தித்தது, என்று நான் கூறவில்லை. தமிழர்கள் முதல்வர் தெரிவித்தார். அதை கூறுகிறேன். அவ்வளவுதான்.


NicoleThomson
பிப் 17, 2024 19:58

நீங்க என்ன சொன்னாலும் அதனை வெட்டி ஓட்டி வேலை செய்யும் RSB ஊடகங்கள் தான் தமிழகத்தில் அதிகம் , அவர்கள் சரியான தரவுகளை என்றுமே வெளியிட்டதில்லை . இப்பவும் அப்படியேதான் இருப்பாங்க


MARUTHU PANDIAR
பிப் 17, 2024 19:29

யாரப்பா அங்கே, நம்மூரு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் நீட்டு ம5றுப்பாளர்கள்லாம் வாங்க. நீங்க ஒத்துக்கினா தான் இவுரு சொல்றது கரிக்கிட்டு. என்னா?


Loganathan Kuttuva
பிப் 17, 2024 17:10

இந்த செயற்கைகோள் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை