மேலும் செய்திகள்
குஜராத்தில் ரூ.3 லட்சத்தை தாண்டிய தனிநபர் வருமானம்
33 minutes ago
: தெலுங்கானாவில், பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியத்தின் சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு உட்பட, 15க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம். எஸ்.பி.பி., என அழைக்கப்படும் அவருக்கு, உலகம் முழுதும் ஏராளமான இசை ரசிகர்கள் உள்ளனர். போராட்டம் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறன் உடைய இவர், ஆந்திராவின் நெல்லுாரில் பிறந்தார். கடந்த 2020ல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி., சென்னையில் உயிரிழந்தார். இசைத்துறையில் சாதனை படைத்த அவரை கவுரவிக்கும் வகையில், தெலுங்கானா அரசு எஸ்.பி.பி.,க்கு சிலை அமைத்துள்ளது. ஹைதராபாதில், அரசுக்கு சொந்தமான பிரபல கலாசார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சிலையை, வரும் 15ம் தேதி மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், எஸ்.பி.பி.,யின் சிலையை திறக்க சமூக அமைப்பினர் சிலர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், சிலையை ஆய்வு செய்ய சென்ற எஸ்.பி.பி.,யின் உறவினர் சுபலேகா சுதாகரை முற்றுகையிட்டு, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, தெலுங்கானா மாநிலம் உதயமானது தொடர்பான பாடலை பாட எஸ்.பி.பி., மறுத்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என கூறப்படுகிறது. தெலுங்கானாவின் முக்கிய ஆளுமைகளான, கத்தார், ஆண்டேஸ்ரீ ஆகியோருக்கு சிலை நிறுவாமல், எஸ்.பி.பி.,க்கு மட்டும் சிலை அமைக்கலாமா எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். அரசு மவுனம் இந்த விவகாரத்தில், ஓட்டு வங்கிக்காக பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதி அரசியல் செய்வ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்ப்பு குறித்து மாநில அரசு மவுனம் காத்து வரும் சூழலில், சமூக வலைதளங்களில் இசை ரசிகர்கள் எஸ்.பி.பி.,க்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். பிராந்திய தடைகளை தாண்டிய இசைத் துறைக்கு ஈடற்ற முறையில் பங்காற்றி உள்ள எஸ்.பி.பி.,க்கு சிலை நிறுவ வேண்டும் என அவர்கள் வாதிட்டு வருகின்றனர். - நமது சிறப்பு நிருபர் -
33 minutes ago