மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
பாகல்கோட்டின் முதோல் தாலுகா உத்தரா கிராமத்தில் வசிப்பவர் அரவிந்த் நாயக். டாக்டரான இவர், பாகல்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். உத்தரா கிராமத்திலும் கிளினிக் நடத்துகிறார். ஏழை, எளியோருக்கு சிகிச்சை அளித்தால், குறைந்த கட்டணமே வாங்குகிறார். இதனால் அவரை 'ஏழைகளின் மருத்துவர்' என்று கிராம மக்கள் போற்றுகின்றனர்.மருத்துவத்தில் வெற்றி கண்ட அவர், விவசாயத்திலும் வெற்றி பெற்று வருகிறார். அதாவது 5 ஏக்கர் நிலத்தில், தர்பூசணி விளைவித்து அசத்தி வருகிறார். இதுகுறித்து அரவிந்த் நாயக் பெருமையுடன் கூறியதாவது:எங்கள் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள், தர்பூசணி பழ விளைச்சலில் ஈடுபடுகின்றனர். ஆனால் தர்பூசணி விளைவிப்பதில், ஏராளமான கஷ்டம் உள்ளது என்றனர். ஆனாலும் எனக்கு தர்பூசணி விளைச்சலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வந்தது.என் நண்பரும், விவசாயியுமான மஞ்சுநாத்திடம் கூறினேன். இருவரும் சேர்ந்து தர்பூசணி பழ விளைச்சலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்தோம். அதன்படி தர்பூசணி விதைகளை வாங்கி வந்து, 5 ஏக்கர் நிலத்தில் விதைத்தோம்.மாட்டு சாணத்தை தான், உரமாக பயன்படுத்துகிறோம். எனது நிலத்தின் அருகில் கட்டபிரபா ஆறு ஓடுவது, எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. தற்போது வறட்சி நிலவுவதால், சொட்டுநீர்ப் பாசனம் மூலம், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகிறோம். தர்பூசணி நன்கு விளைந்து உள்ளது. ஒவ்வொரு பழமும் 4 கிலோ முதல் 7 கிலோ எடையில் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 25 டன் பழங்கள் கிடைக்கின்றன.லாபத்திற்காக நான் விவசாயத்தில் ஈடுபடவில்லை. விவசாயம் எனக்கு மன அமைதி தருகிறது. எனது அப்பா சுபாஷ் நாயக்கும் டாக்டர்.அவரும் விவசாயத்தில் ஈடுபட்டார். அவரிடம் இருந்து தான் எனக்கும் விவசாயத்தில் ஈடுபட ஆசை வந்தது. விவசாயம் மட்டுமே நம்மை எப்போதும் கைவிடாத தொழில்.இவ்வாறு அவர்கூறினார்.
3 hour(s) ago | 1
8 hour(s) ago | 2