உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலையின்றி தவிப்பு!

வேலையின்றி தவிப்பு!

வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் ஏற்றத்தாழ்வு போன்றவற்றால் மத்திய பா.ஜ., அரசு கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை விளிம்பு நிலைக்கு தள்ளிஉள்ளது. 20 முதல் 24 வயதினரில், 40 சதவீதம் பேர் வேலையின்றி தவிக்கின்றனர்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

ஸ்மிருதியை திட்டாதீர்!

வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் இயல்பானது. ஒருவரை அவமானப்படுத்துவதும், அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம். ஸ்மிருதி இரானி தோற்று போய் அரசு பங்களாவை காலி செய்ததை பலர் மோசமாக விமர்சிக்கின்றனர். யாரையும் அவ்வாறு பேசாதீர்கள்.ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

ராகுலின் இரட்டை வேடம்!

ராகுல் எங்கு சென்றாலும் அரசியல்சாசன நகலை எடுத்துச் செல்கிறார்; மற்றொரு புறம் அரசியல்சாசனத்தை மீறுகிறார். அதற்கு உதாரணம் கர்நாடகா. இங்கு எஸ்.சி., - எஸ்.டி., நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபாயில், பெரும்பகுதி பிற பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை