உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்காக, மாறி மாறி துணை குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது முறையல்ல என, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், அம்மாநில முதல்வராக இருந்த, ஜே.எம்.எம்., எனப்படும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில், ஹேமந்த் சோரனின் உதவியாளராக இருந்த பிரேம் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, திபாங்கர் தத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் மீண்டும் வந்தது.அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:சட்டவிதிகளின்படி, ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அல்லது இறுதி குற்றப்பத்திரிகையை 60 - 90 நாட்களில் தாக்கல் செய்ய முடியாதபட்சத்தில், தானாக ஜாமின் வழங்கப்பட வேண்டும்.இந்த நபர், 18 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் தொடர்ந்து சிறையில் இருப்பதற்காக, இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை என்று கூறி, மாறி மாறி துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது முறையல்ல.நீங்கள் விசாரணையை முடிக்காததால், இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், ஒருவரை எந்தக் காலவரையும் இல்லாமல் தொடர்ந்து சிறையில் வைக்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

வெண்தாடி வேந்தர்
மார் 23, 2024 08:39

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்


theruvasagan
மார் 21, 2024 11:17

அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து நீதி மன்றம் வரை சென்றது. ஆனால் வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் தவறு செய்தது யார் எ்ன்றே கண்டுபிடிக்க முனையவில்லையே. இங்கு உங்களுடைய வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்கிற வாதத்தை பொறுத்திப் பார்க்கவும்.


venugopal s
மார் 21, 2024 07:19

உச்ச நீதிமன்றம் இப்படி பாஜகவின் ராஜதந்திரங்களை ஓவ்வொன்றாக தோலுரித்து வெளிக்கொண்டு வந்து கொண்டே இருந்தால் பாவம் பாஜக எப்படி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும்? அதனால் உச்ச நீதிமன்றம் சரியில்லை!


Kasimani Baskaran
மார் 21, 2024 05:58

குற்றவாளிகளை பாதுகாப்பதில் நீதிமன்றம் காட்டும் வேகம் நிரபராதிகளை பாதுகாப்பதில் காட்டுவதில்லை. நீதித்துறையின் செயல்பாடுகள் இந்தியா மீதான நம்பிக்கையை தகர்த்து விடும் போல தெரிகிறது.


sankaranarayanan
மார் 21, 2024 05:18

திடியரென்று உச்ச நீதி மன்ற தேர்தல் சமயத்தில் முழித்துக்கொண்டு அறிக்கை விடுவதில் மர்மம் என்ன வோ


Dharmavaan
மார் 21, 2024 04:10

கேவலமான நீதி


D.Ambujavalli
மார் 21, 2024 04:01

அமலாக்கத்துறை அவரை திஹாருக்கு அழைத்துச்சென்று கேஸை முடிக்கலாம் ‘பைத்தியம் தெளிந்தால் கல்யாணம் ‘என்பது போல தம்பியை. தேடும் படலத்திலேயே வருஷத்தை ஒட்டிவிட்டு, விதியே என்று ஜாமீன் கொடுத்துவிடுவார்கள் என்றுதானே தங்கள் கஸ்டடியில் வைத்துக்கொண்டு போலீஸ் தேடுவது போல பாவலா காட்டுகிறார்கள்?


Bala Paddy
மார் 21, 2024 03:23

பலே. சூப்பர்.


Shankar
மார் 21, 2024 00:33

அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மைகளை நீதிமன்றம் ஆராயவேண்டுமே தவிர குற்றவாளி 18 மாதங்களுக்கும் மேலாக இருக்கிறார் என்பதற்காக குற்றவாளிக்கு சாதகமான செயலில் உச்சநீதிமன்றம் செயல்படுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?


Bala Paddy
மார் 21, 2024 00:30

ஆமாம் இவங்க எல்லாம் உத்தமர்கள் அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள். ????????????????????


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை