உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.பி.பி.எஸ்., சீட் இழந்த தமிழக மாணவர்களுக்கு மீண்டும் இடம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., சீட் இழந்த தமிழக மாணவர்களுக்கு மீண்டும் இடம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வங்கி விடுமுறை நாள் என்பதால், கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பை இழந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, மீண்டும் அந்த இடத்தை வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரச்னை

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஷில்பா, தன்யா, விக்ஷோ ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பில் சேர, 'மெரிட்' முறையில் எங்களுக்கு இடம் கிடைத்தது. அதற்கான கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளன்று வங்கி விடுமுறை தினமாக அமைந்தது. மேலும், வங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணத்தால் கட்டணம் செலுத்த முடியவில்லை. 'இதனால், எங்களுக்கு கிடைத்த மருத்துவப் படிப்புக்கான இடம் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் இடத்தை வழங்க உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களுக்கான இடத்தை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விதிமுறை

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'சில மாணவர்களுக்காக இருக்கும் நடைமுறையை மாற்ற முடியாது. 'அவ்வாறு செய்தால் அது நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கல்வி கட்டணம் செலுத்த தாமதம் செய்த மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது' என, திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மத்திய அரசு இந்த விவகாரத்தில் விதிமுறைகளில் தளர்வு மேற்கொள்ளவில்லை என்றால் தங்களால் எதுவும் செய்ய இயலாது' என்றார். இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'வங்கி விடுமுறை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாததால், மருத்துவ படிப்பு இடத்தை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் அந்த இடத்தை வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை