உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவுக்கு வழக்குகளை விசாரிக்கவும் கூடாது; நடவடிக்கையும் கூடாது...! சுப்ரீம் கோர்ட் அதிரடி!

சவுக்கு வழக்குகளை விசாரிக்கவும் கூடாது; நடவடிக்கையும் கூடாது...! சுப்ரீம் கோர்ட் அதிரடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.

கைது

பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது சென்னை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4gd00nq1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த சவுக்கு சங்கர், ஒவ்வொரு வழக்கிலுமாக ஜாமின் பெற்று வந்தார். இதனிடையே, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவரது தாயார் கமலா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

குண்டாஸ் ரத்து

கடந்த ஆக.,9ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீதுள்ள பிற வழக்குகளில் ஜாமின் பெற தேவையில்லை எனில், விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

மீண்டும்

இதைத் தொடர்ந்து, தன் மீதுள்ள அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்குமாறு சவுக்கு சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது தேனி நகர இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார், குண்டர் சட்டத்தில் மீண்டும் வழக்குப்பதிவு செய்தனர். இது சவுக்கு சங்கர் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இடைக்காலத் தடை

இந்த நிலையில், சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கிய பிறகும், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு தலைமை நீதிபதியே நேரடியாக கேள்வி எழுப்பினார்.மேலும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் ஆணை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Sampath Kumar
செப் 04, 2024 10:04

இந்த போக்கிரி பய ஒரு கிரிமினல் பத்திரிகை காரன் இவனிடம் சிக்கிய எத்தனையோ அரசியில் வியாதிகள் சினிமா பிரபலங்கள் அம்புட்டு பெருகிட்டயெனும் காசு பார்த்த பய இவன் இவனின் இந்த வேலிக்கு பல அரசியில் புள்ளிகளின் சப்போர்ட்டும் உண்டு குறிப்பாக பிஜேபி காரனின் சப்போர்ட் உண்டு அது நல்ல அய்யாவிற்கு உச்ச கோர்ட் இப்படை ஒரு தீர்ப்பை தந்து உள்ளத்தில் வியப்பு ஒன்றும் இல்லை


sankaranarayanan
ஆக 19, 2024 05:47

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு தலைமை நீதிபதியே நேரடியாக கேள்வி எழுப்பினார் என்று மட்டும் இல்லாமல் நீதிமன்றம் பல முறைகள் கூறியும் கேட்காத அரசை என்ன செய்யலாம் என்றே நீதிமன்றமே நிச்சம் செய்து ஆணை பிறப்பிருக்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற நடந்துகொள்ளவும் எல்லா மாநிலங்களுக்கும் நீதிமன்ற ஆணையை மதிக்க முற்படும் இல்லையே சொல்லவேண்டாம்....... சொல்ல வேண்டாம் .......


Subramanian Srinivasan
ஆக 17, 2024 20:16

தரக்குறைவாக,அசிங்கமாத்தானே. பேசினான்.அதுகருத்து. சுதந்திரம்.கஞ்சா புடித்தானா?அது தனிமனித சுதந்திரம்.அவ்ளோதான்.


Narayanan
ஆக 20, 2024 13:08

சவுக்கு சங்கரை விட அசிங்கமாக பேசிய ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , சைதை சாதிக் ,கிருஷ்ணமூர்த்தி , தமிழன் பிரசன்னா, பொன்முடி இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? அசிங்கம் சவுக்கு சங்கரை உச்சநீதிமன்றம் விடுவித்த பின்னரும் குண்டர் சட்டமா ? சட்டத்தை மதிக்காத அந்த காவலருக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும்


Rajesh N
ஆக 17, 2024 14:46

திமுக வின் அராஜக போக்கிற்கு உச்ச நீதி மன்றம் கொடுத்துள்ள ஆப்பு - என்ஜோய் ஸ்டாலின்


தமிழன்
ஆக 16, 2024 15:23

ஒரு வழக்கை நடத்த கூடாது விசாரிக்க கூடாது என்று சொல்லும் நீதி மன்றம் அவரை விடுதலை செய்யவும் சொல்ல முடியும் தானே.. ? அப்படி செய்தால் திமுக ஆட்சி இருக்குமா?


MURALI S
ஆக 15, 2024 22:43

கட்சியின் பாதுகாப்பும் அங்கீகாரமும் சவுக்கு சங்கருக்குத் தேவை. அதற்கு அண்ணாமலை முன்னிலையில் பாஜக-வில் சேருவது அவரது அரசியல் நகர்த்தலுக்கும்.. ஏன் உயிருக்கும் கூட பாதுகாப்பளிக்கும்.


Ethiraj
ஆக 15, 2024 19:14

State govt bringing down the image of police and judiciary. Spending their energy on a you tuber does not worth it


Ravi
ஆக 15, 2024 14:00

திமுக மிகவும் ஆடுகிறது , நேரம் மாறும் அப்போ இருக்கு இந்த குடும்பம் என்ன ஆகும்னு.


Mervin Raj
ஆக 15, 2024 20:41

Well said. Their family is at stake


Ravi
ஆக 15, 2024 13:57

முழுவதும் ஷங்கரை கைது சைவதற்க்கான நாடகம் , இந்த குன்றிய அரசனுக்கு கொள்ளைய் அடிக்கணும் , மகன் மருமகன் இரண்டுபேரும் வெளிநாட்டில் பணத்தை பதுக்கணும் . ஒட்டு போடற ஜென்மமங்களுக்கு பணம் என்கின்ற எலும்பு துண்டை போட்டால் ஒட்டு போடும் என்று இவர்களுக்கு தெரியாத என்ன .


Rani Prathusha
ஆக 15, 2024 12:10

சவுக்கு வெற்றி. அரசுக்கு குட்டு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை