உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் மரணம்: ஆக.,20ல் உச்சநீதிமன்றம் விசாரணை

கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் மரணம்: ஆக.,20ல் உச்சநீதிமன்றம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தப் போவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்ஜி கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.பயிற்சி பெண் டாக்டர் மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளி மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் டில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று அவசர சிகிச்சையை தவிர்த்து மற்ற சேவைகளை புறக்கணித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தை, வரும் செவ்வாய்கிழமை(ஆக.,20) அன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mohan
ஆக 18, 2024 23:28

மனசு வந்ததே அதிசயம் தான். நியாயம் வழங்குகிறோம் என்று நிர்பயா வழக்கில் கைதான கயவாளிகளுக்கு அப்பீல் மீது அப்பீல் செய்யவும், 18 வயதிற்கு குறைந்த சிறுவன் கூட்டு பலாத்காரம் செய்திருந்தம் நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது. ஏன் ????


lana
ஆக 18, 2024 21:32

எனக்கு என்ன பயமா இருக்கு ன்னா. தலைமை lord ஜாமீன் வழங்குவது தான் முக்கியம் எந்த கடுமையான குற்றம் ஆக இருந்தாலும் அப்படின்னு சமீபத்தில் சொன்னார். அது தான் பயம்


gmm
ஆக 18, 2024 21:11

உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பல அதிகார நிலை தாண்டி, தானே விசாரிக்கும் முறை சரியல்ல. சட்ட, நிர்வாகத்தில் இதற்கு இடமில்லை. சுய அதிகாரம். வீண் விளம்பரம். தங்களால் அதிகாரம் செலுத்த முடியும் என்ற அறிவிப்பு? கல்லூரி எல்லையில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் அதிகாரம் போதும். செயல்படுத்த முடியாமல் தடுப்பது யார்.? தடுக்கும் மாநில ஆட்சியை கலைத்து, கட்சியை தடை செய்ய தயக்கம் ஏன்? டாக்டர் நிலை ஆளும்கட்சி அமைச்சர், முக்கிய பொலிஸார், வழக்கறிஞர், நீதிபதிக்கு ஏற்பட்டால், குற்ற நடவடிக்கை உடன் பாயுமா?பாயாதா?


அப்புசாமி
ஆக 18, 2024 21:02

2047 க்குள்ளாற தீர்ப்பு வந்துர்ம் கோவாலு. பொறுத்திரு கோவாலு.


sankaranarayanan
ஆக 18, 2024 20:58

உச்ச மன்றரமாவது முதலில் மமதாவின் மமதை பிடித்த மக்கள் வெறுக்கும் அரசை டிஸ்மிஸ் செய்ய முதலில் உத்திரவு இடவேண்டும் பிறகு இடைஞ்சல் இல்லாத விசாரணையை துவங்க வேண்டும் மக்கள் சொல்லணாதுரங்களுடன் அங்கே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் அரசின் இயலாமை மக்களின் பாதுகாப்பற்ற அரசு மக்களை பழிக்கு பழி வாங்கும் அரசு உடனே கலைக்கப்பட வேண்டும் மாநிலத்தில் எந்த விதமான முன்னேற்றமும் வளர்ச்சிகளும்இல்லவே இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஆக 18, 2024 20:54

அந்த மருத்துவனையைச் சுற்றி போராடத்தான் தடை ..... நாடு முழுவதும் டாக்டர்கள் போராடுவதால் இத்தனை மரியாதை ...... உச்சநீதிமன்றம் தாமே முன்வந்து விசாரிக்கப்போகிறது .... சி பி ஐ அமைப்பை அழைத்து அப்டேட் கேட்கும் .... செயல்படவேண்டிய முறை குறித்து சில ஆலோசனைகளை வழங்கும் .... யூதர்கள் போல எங்கும், எல்லோராலும் தட்டியே வைக்கப்படும் இந்திய பிராம்மணர்களால் இப்படிப்போராட முடியுமா ????


RAMAKRISHNAN NATESAN
ஆக 18, 2024 20:33

In the coming years living standard in India shall become worst. Thanks to BJP.


Prabakaran J
ஆக 18, 2024 19:05

still s.court is alive...


பேசும் தமிழன்
ஆக 18, 2024 18:53

மேற்கு வங்க அரசை ஏன் இன்னும் வீட்டுக்கு அனுப்பவில்லை என்று கேளுங்கள்.


vbs manian
ஆக 18, 2024 18:13

நாடே கொந்தளித்து போயிருக்கிறது. நல்லவேளை யுவர் ஆனருக்கு இப்போதாவது தோன்றியதே.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி