உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., செயலால் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம்

பாக்., செயலால் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இருநாட்டு நட்பு மற்றும் நல்லெண்ணம் உள்ளிட்ட கொள்கைகளை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பகல்ஹாம் சம்பவத்தை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி வருகிறது.இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பொறியியல் நுட்பங்கள், காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட சூழ்நிலைகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை கட்டாயமாக்கியுள்ளன. பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை பாகிஸ்தான் தடுத்து வருகிறது.ஒப்பந்தத்தின் முன்னுரையில், அது நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது. இந்தக் கொள்கைகள் அனைத்தும் உண்மையில் பாகிஸ்தானால் கைவிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தை அதன் விதிகளின்படி பயன்படுத்திக் கொள்ளும் நமது திறனில் தலையிடுகிறது.அடிப்படை நில நிலைமைகள் முற்றிலும் மாறியிருக்கும் போது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது இயற்கையானது மற்றும் இந்தியாவின் உரிமைக்கு உட்பட்டது.1950கள் மற்றும் 1960களின் முற்பகுதியில் இருந்த பொறியியல் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Indhuindian
மே 24, 2025 19:44

Never waver from the current position and face the pressure from International community. Provide and even divert sufficient funds for chanelling the water from these rivers to Indian territory. Should realise that Water Bomb is more deadlier than even the Atom and Hydrogen Bombs. Fragment Pakistan and remove Pakistan from the world map.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை