உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொன்மையான ராமர் கோயில் வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்: ஆதிர் ரஞ்சன் வலியுறுத்தல்

தொன்மையான ராமர் கோயில் வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்: ஆதிர் ரஞ்சன் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ‛ராமர் கோயில் வரலாறு என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. அதன் வரலாற்றை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்' என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். திறப்பு விழா தொடர்பாக மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: ராமர் கோயில் வரலாறு என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. இதில் பலரின் பங்களிப்பும் உள்ளது. எனவே, அதன் வரலாற்றை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். ஆனால் பிரதமர் மோடி, தன்னுடைய பெயரை உயர்த்தி கொள்வதற்காக, எந்த ஒருவரின் பெயரையும் குறிப்பிடுவதே இல்லை. இது மிகவும் பழைய போராட்டம். பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் இதற்கான பெருமை எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜன 10, 2024 00:51

அவர்கள் ஆட்சியின் போது அந்த கோவில் வராமல் தடுக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவையும் இந்த காங்கிரெஸ்காரர்கள் செய்தார்கள். இன்று, ஹிந்துக்கள் வோட்டு போய்விடுமோ என்கிற பயத்தில் அயோத்தி கோவிலுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். மிகவும் மட்டமான கட்சியினர் இந்த காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட்ஸ்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 09, 2024 20:53

வரலாற்றை கிளறினால் கான் காங்கிரசுக்குத்தான் தொல்லை, அவர்கள் செய்த துரோகங்கள் எல்லாம் வெளியே வரும். வரவேண்டும்.


vbs manian
ஜன 09, 2024 20:00

ராமர் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று பிரமண பாத்திரம் தாக்கல் செய்தது இவர் கட்சி. இதுதான் இவர்களின் தொன்மையான ராமர் வரலாறு.


Arul Narayanan
ஜன 09, 2024 18:18

ராஜீவ் காந்தி தான் இந்துக்களுக்கு கோயிலை திறந்து விட்டார் என்று காங்கிரஸ் சொல்ல வேண்டியது தானே.


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 17:14

அயோத்தி பகவான் ராமன் அவதார ஸ்தலம் என்பதனை நிரூபிக்க முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்(நேரு) தடையாய் இருந்தார். விரும்பவும் இல்லை. உண்மை வரலாறு தற்போதைய பிரதமர் நரேந்திரன் (மோடி) காலத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ