வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
புதுடில்லி: தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி., விளக்கம் அளித்துள்ளது. ரயில் பயணங்களின் போது உடனடியாக பயணிக்க தட்கல் முறை பின்பற்றப்படுகிறது. கட்டணம் அதிகம் என்றாலும் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் பயணம் செய்வதற்கு 24 மணி நேரம் முன்பாக டிக்கெட்டை முன்பதிவு செய்யவேண்டும்.குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், படுக்கை வசதிக்கு முற்பகல் 11 மணிக்கும் தட்கல் முன்பதிவு தொடங்கும். தட்கல் மற்றும் பிரிமியர் தட்கலுக்கான முன்பதிவு நேரம் மாற்றப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.இந் நிலையில் இந்த தகவல்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி.,. விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான வெவ்வேறு நேரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் சில பதிவுகள் பரவி வருகின்றன. குளிர்சாதன வசதி அல்லது குளிர்சாதன வசதி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் தற்போது அத்தகைய மாற்றம் எதுவும் முன் மொழியப்படவில்லை. முகவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாறாமல் உள்ளன.இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்