உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தற்காலிக பணியாளர்களுக்கு அரசு வேலை: மாதந்தோறும் ரூ.30,000 சம்பளம் நிச்சயம்: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

தற்காலிக பணியாளர்களுக்கு அரசு வேலை: மாதந்தோறும் ரூ.30,000 சம்பளம் நிச்சயம்: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால், தற்காலிக பணியாளர்கள், 30,000 ரூபாய் சம்பளத்துடன் நிரந்தரமாக்கப்படுவர்,'' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். பீ ஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்,- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியில் உள்ள 'மகாகத்பந்தன்' கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இருப்பினும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு, வாக்குறுதிகளை வாரியிறைத்து வருகிறார். பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பீஹாரில் உலக வங்கியின் உதவியுடன், 'ஜீவிகா' எனப்படும் பீஹார் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களான இதில் பணிபுரியும் பெண்கள், 'ஜீவிகா தீதி' என அழைக்கப்படுகின்றனர். மாநில அரசு, இவர்களுக்கு அநீதி இழைக்கிறது. இவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. வரும் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், மாநிலம் முழுதும் உள்ள ஜீவிகா தீதிகள் இரண்டு லட்சம் பேருக்கும், மாதந்தோறும் 30,000 ரூபாய் சம்பளத்துடன் நிரந்தர அரசு வேலை வழங்கப்படும். அவர்களின் தற்போதைய கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். இது, சாதாரண அறிவிப்பல்ல. நீண்ட நாட்களாக அவர்களால் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான தீர்வு. அனைத்து ஜீவிகா தீதிகளுக்கும், அரசு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீட்டுத் தொகையை புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு வழங்கும். பிற அரசு பணிகளில் அவர்கள் ஈடுபட்டால், மாதந்தோறும் கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்படும். அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களின் திறமையும், சம்பளமும் இடைத்தரகர்களால் உறிஞ்சப்படுகின்றன. அவற்றை முறியடிக்கும் வகையில், ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் நிரந்தரமாக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Muthukumaran
அக் 23, 2025 17:32

தேர்தல் ஆணையம் அம்மாநில நிதி நிலை அறிக்கையை வைத்து இவர் குறிப்பிடும் சலுகைகளை வைத்து வாக்குறுதி நிறைவேற்ற வாய்ப்பில்லாத நிலையில் விளக்கம் கேட்க வேண்டும். மக்களை அவர்கள் ஏமாற்ற நினைப்பது இயல்பு. நிர்வாகம் அதைத்தடுப்பது அதன் கடமை. நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கைக்கு சட்டத்தில் இடமில்லை எனக் கைலிரிப்பதை விட்டுவிட்டு முன்னரே தடுக்க வேண்டும்.


Vignesh
அக் 25, 2025 06:10

நம்பிக்கை உள்ளதா தேர்தல் ஆணையத்தின் மீது..


தத்வமசி
அக் 23, 2025 12:34

ஊர் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து அதிலிருந்து கட்டிய வரியில் இருந்து இந்த அரசியல் ஆக்டோபஸ் அதை உறிஞ்சப் பார்க்கிறது.


Vignesh
அக் 25, 2025 06:10

இப்பொழுது உள்ள அரசு போல்


duruvasar
அக் 23, 2025 10:34

அடிச்சு விடு அடிச்சு விடு என்றது அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெளிவாக தெரிகிறது.


KOVAIKARAN
அக் 23, 2025 08:48

தீய திருட்டு திமுக 510 பொய் வாக்குறுதிகளை கொடுத்து 2021ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த மாதிரி ஊழல் மன்னரின் இந்த வாரிசு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறார் போலும். ஆனால், பீஹார் வாக்காளர்கள், தமிழக வாக்காளர்களைப்போல ஓசி சாராயத்திற்கும், 2000 ரூபாய் ஓசி பணத்திற்கும் ஒட்டுப் போடுவதற்காக அலைபவர்கள் அல்ல. அவர்கள் மாநில வளர்ச்சிக்கும், அவர்களது வாழ்வு மேம்படவும் எந்த அரசு நடவடிக்கைகள் எடுக்கிறதோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். எனவே, பீகாரின் ஊழல் மன்னர் லாலு பிரசாத் யாதவ் அவர்ளின் இந்த வாரிசான தேஜஸ்வி யாதவ் கட்சி வரும் தேர்தலில் மீண்டும் படு தோல்வி அடையப்போவது உறுதி.


Vignesh
அக் 25, 2025 06:13

நீதி மன்றத்தில் திமுக மீது வழக்கு தொடுக்கலாம்


Venugopal, S
அக் 23, 2025 08:47

ஆறாம் வகுப்பு வரை படித்த இவருக்கு 30000 த்திற்கு எவ்ளோ சைபர் என்று தெரியுமா?


MARUTHU PANDIAR
அக் 23, 2025 02:41

இவனை தூக்கி கொண்டு போய் எங்கே போடுவது? இவன் அப்பன் வேலை கொடுப்பதற்கு நிலத்தை எழுதி வாங்கி வெச்சதை எல்லாம் திருப்பிக் கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுப்பானா?


தாமரை மலர்கிறது
அக் 23, 2025 02:22

வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை. முப்பதாயிரம் சம்பளம். சும்மா அள்ளிவிடு. பதவிக்கு வந்தாத்தானே, இதெல்லாம் கொடுக்கணும். வரப்போறதில்லை. அதனால் நிலவை பிடிச்சு உருக்கி தங்க செயினாக்கி தரேன் என்று சொல்ல வேண்டியது தானே.


சமீபத்திய செய்தி