மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
புதுடில்லி, ''ஜனவரியில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்,'' என, இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.இதுகுறித்து, டில்லியில் அவர் கூறியதாவது:ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில், குஜராத், கோவா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில், வழக்கத்தைவிட அதிக குளிர் அலைகள் இருக்கும். ஜன., - மார்ச் வரையிலான காலத்தில், வட மாநிலங்களின் மழைப்பொழிவு, நீண்ட கால சராசரியில், 86 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
03-Dec-2024