உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 4 பேர் கைது

பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 4 பேர் கைது

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். இதில் நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து பஞ்சாப் மாநில டி.ஜி.பி. கவுரவ் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி , சிறப்பு அதிரடிப்படை போலீசார் , நடத்திய தேடுதல் வேட்டையில் ராஜ்புரா என்ற இடத்தின் லிபர்டி செளவுக் பகுதியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜாரின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இவர்கள் வாயிலாக பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிக்கொடுத்தவன் இக்பால்ப்ரீத்சிங் என்ற புச்சி ஆவான். இவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு இச்சதிசெயலுக்கு மூளையாக இருந்துள்ளான். தக்க நேரத்தில் பஞ்சாப் போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் தாக்குதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vadivelu
மே 15, 2024 06:32

அதெப்படி அவர்கள் பஞ்சாபில் தீவிரவாத நடவடிக்கை எடுப்பார்கள் நம்ப முடிய வில்லையே


sankaranarayanan
மே 15, 2024 06:18

இந்த விஷயத்தை முற்றிலும் கனடா பிரதமர் த்ருடோவிடமும் அமெரிக்க வெளியுறவுத்துறையிடமும் முழுமையாக விளக்க வேண்டும்


கண்ணன்
மே 15, 2024 06:13

கனடாவில் இருந்து கொண்டு ஒருவர் உளறிக்கொண்டுள்ளாரே, அவர் என்ன சொல்லப்போகிறார்?


Kasimani Baskaran
மே 15, 2024 05:59

நிஜார் ஆதரவு கோஷ்டியை மொத்தமாக மண்ணுக்குள் உயிருடன் புதைக்க வேண்டும் விட்டு வைத்தால் கோடிகளை கொட்டி இந்திய நீதித்துறை அரை நூற்ராண்டுக்கு வழக்கு நடத்தி குற்றவாளி என்பதற்கு ஆதாரம் இல்லை என்று விட்டுவிடும்


J.V. Iyer
மே 15, 2024 04:55

தமிழகம் போல மற்ற மாநிலங்கள் பஞ்சாப், வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா கேரளா பரவாயில்லை, இதில் சேர்ப்பது கடினம்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை