உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமறைவான சோரன் திரும்பி வந்தார் : மனைவியை முதல்வராக்க திட்டம்?

தலைமறைவான சோரன் திரும்பி வந்தார் : மனைவியை முதல்வராக்க திட்டம்?

புதுடில்லி : நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் புதுடில்லி இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ., கார் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

14 பேர் கைது

கடந்த 24 மணி நேரமாக தலைமறைவாக இருந்த சோரன், நேற்று ராஞ்சி திரும்பினார். அவரிடம் இன்று விசாரணை நடக்கிறது.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தில், போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, முதல்வர் ஹேமந்த் சோரன் அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநில சமூக நலத்துறை இயக்குனரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறையினர், அவருக்கு ஏழு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், புதுடில்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில், அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது சோரன் வீட்டில் இல்லை. மொத்தம், 13 மணி நேரம் அவரது வீட்டில் இருந்த அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ., - எஸ்.யு.வி., ரக கார் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.கடந்த 24 மணி நேரமாக எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் தலைமறைவாக இருந்த சோரன், நேற்று ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பினார்.

மனைவிக்கு பதவி?

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை அழைத்து அவசர ஆலோனை கூட்டம் நடத்தினார். அப்போது, தான் கைது செய்யப்பட்டால், தன் மனைவி கல்பனாவை முதல்வராக்குவது குறித்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்.இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் இன்று மதியம் 1:00 மணிக்கு விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bye Pass
ஜன 31, 2024 18:06

அண்ணி சினிமா துறைக்கு சென்றால் கங்கனாவுக்கு போட்டியாக வரலாம்


கருப்பு கவுனி அரிசி
ஜன 31, 2024 16:24

சூப்பரா இருக்காங்க


duruvasar
ஜன 31, 2024 14:26

இந்த முதலமைச்சர் ஐயாவை பார்க்கும்போது அசப்புல நம்ப பவர் ஸ்டார் ஜாடை தெரிகிறது . இவர் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது நல்லா வருவார் என்பது தெரிகிறது. மேற்கொண்டு போக வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் வண்டி ராஞ்சியில் நிற்க வேண்டியதாக போய்விட்டது இல்லாவிட்டால் அதே வண்டியில் வாங்க கடல் வழியாக தாய்லாந்து சென்றிருப்பார் .


A1Suresh
ஜன 31, 2024 09:04

அடுத்தது கேஜ்ரிவால் மனைவி ரெடி . அனைத்தும் ராப்ரிதேவி-லாலு பிரசாத் தம்பதியினரின் கைங்கர்யம்


A1Suresh
ஜன 31, 2024 09:03

இதே வழியில் தமிழகத்தில் அடுத்தது முதல்வராவது துர்கா சுடாலினா? ஓஹோ தான் முதல்வராகத்தான் கோயில்களுக்கு சுற்றுப்பயணமா ?


VENKATASUBRAMANIAN
ஜன 31, 2024 08:39

எல்லா குடும்ப கட்சிகளும் ஊழலில் சிக்கி உள்ளன. இதில் கேஜ்ரிவால் மிகவும் சாமர்த்தியமாக அடுத்தவர் மூலம் ஊழல் செய்து வருகிறார். மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


Barakat Ali
ஜன 31, 2024 08:35

இந்த அண்ணி முதல்வர் ஆனா அவனவன் மந்திரிசபையில் இடம் பிடிக்க போட்டி போடுவானுங்களே .....


N.Purushothaman
ஜன 31, 2024 08:11

இதனாலேயே கெஜ்ரி கடந்த சில மாதங்களாக தன்னை கைது செய்ய முயற்சி நடப்பதாக அரசியல் செய்து வருகிறார் ....


SUBBU,MADURAI
ஜன 31, 2024 07:56

I am interested in Arvind Kejriwal That would be a Blockbuster hunting!


J.V. Iyer
ஜன 31, 2024 06:56

எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி