உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காமல் அரசு அலட்சியம்

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காமல் அரசு அலட்சியம்

சாம்ராஜ்நகர்: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காமல், கர்நாடகா அரசு அலட்சியம் காட்டி வருகிறது.கடந்த 2021ம் ஆண்டு கர்நாடகாவில், கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. அந்த நேரத்தில் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.,வுக்கு எதிராக, காங்கிரசார் பெரிய அளவில் போராட்டம் நடத்தி இருந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று, அப்போதைய பா.ஜ., அரசு அறிவித்தது.ஆனால் அறிவித்தப்படி நிவாரணமும், வேலையும் வழங்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உறுதி அளித்தார். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு எட்டு மாதங்கள் ஆகியும், இதுவரை நிவாரணமோ, வேலையோ வழங்கவில்லை. இதனால் உயிரிழந்த ஆண்களின் மனைவியர், அரசுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.'உங்கள் அரசியல் லாபத்திற்காக, எங்கள் கணவர்களின் மரணத்தை பயன்படுத்தினீர்கள். 'எங்களுக்கு எந்த உதவியும் செய்வது இல்லை. எங்கள் கணவர்கள் மரணத்திற்கு முந்தைய பா.ஜ., அரசு காரணம். 'நாங்கள் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு, தற்போதைய காங்கிரஸ் அரசே காரணம். 'கணவரை இழந்த பின்னர் பெற்றோர் வீட்டில் வசிக்கிறோம். உறவினர்களுக்கு பாரமாக இருக்கிறோம். இதனால் எங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ