உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்

மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கு வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, உரிய விசாரணை நடக்கவில்லை என்றால் சி.பி.ஐ., விசாரணை கோரப்படும் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ள கோல்கட்டா உயர்நீதிமன்றம், ஆவணங்களை உடனடியாக அந்த அமைப்பிடம் ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rsudarsan lic
ஆக 13, 2024 20:31

இதுவரை அறிந்த படி கல்லூரி வளாகத்தில் அரை சம்பளம் வாங்கும் ஓர் அயோக்கியன் டாக்டர் என்றும் பாராமல் மிருகமாக நடந்துள்ளான். இதற்கு நாடு தழுவிய போராட்டம் சிபிஐ முதlவர் மீது பழி. இது எப்படி நடக்காது இருந்திருக்க முடியும் என்று சிபிஐ சொல்லட்டும்.மிக முக்கியமாக இந்த மிருகத்தை 15 நாட்களில் தூக்கில் போடட்டும். மாநில போலீஸ் க்குஒரு வாரம் கெடு. சிபிஐ க்கு? நாடு அறியட்டும்


Sivagiri
ஆக 13, 2024 19:47

மம்தாவுக்கு , மத்திய அரசை வசை பாடுவதற்கு இன்னொரு சான்ஸ் -


Ramki
ஆக 13, 2024 18:44

ஆனாலும் மம்மதா பேகம் ஒத்துழைப்பு தருமா என்பது ???


பேசும் தமிழன்
ஆக 13, 2024 18:24

இதை தான் பொறுப்பை தட்டிக் கழிப்பது.... அடுத்தவர்களிடம் பொறுப்பை தள்ளி விடுவது என்பது......தன் மீது பழி வந்து விடக்கூடாது என்பதற்காக தான்.... இந்த சிபிஐ விசாரணை கோரிக்கை வைப்பது !!!


தத்வமசி
ஆக 13, 2024 16:15

இப்போது தன்னை காப்பாற்றுவதற்கு சிபிஐ வரவேண்டும் என்று மம்தா விரும்புகிறார். மற்ற நேரங்களில் அவர்களுக்கு நோ. இப்போது மட்டும் எதற்கு ?


rsudarsan lic
ஆக 13, 2024 20:24

இது நாடு தழுவிய விஷயமாகி விட்ட படியால் சிபிஐ. கொஞ்சம் விஷயம் தெரிந்து பேசுங்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை