உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவங்கியது பிரச்னை: மெட்ரோ பணிக்கு வெளிமாநில ஆட்களை அமர்த்த எதிர்ப்பு: தலைமை அலுவலகம் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்

துவங்கியது பிரச்னை: மெட்ரோ பணிக்கு வெளிமாநில ஆட்களை அமர்த்த எதிர்ப்பு: தலைமை அலுவலகம் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்

பெங்களூரின் செல்லகட்டா - ஒயிட்பீல்டு; சில்க் இன்ஸ்டிடியூட் - மாதவரா இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே பணிகள் முடிந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் ரயில் சேவை துவங்க வாய்ப்பு உள்ளது.தற்போது வரை மெட்ரோ ரயில்களை இயக்கும் ஓட்டுநர்கள் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்களே.இந்நிலையில் மெட்ரோ நிறுவனம் 50 ரயில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில், கன்னடம் தெரியாதவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஓராண்டுக்குள் கன்னடம் கற்று, மெட்ரோ நிறுவனம் நடத்தும் கன்னட தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.இந்த அறிவிப்புக்கு மெட்ரோ ஊழியர்கள் சங்க தலைவர் சூர்ய நாராயணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடுத்து நிறுத்தம்

மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது, கன்னட அமைப்பினரும் வெகுண்டு எழுந்துள்ளனர். ரயில் ஓட்டுநர் பணிக்கு வெளிமாநில ஆட்களை சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதற்காக வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெங்களூரு சாந்திநகரில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை அலுவலகம் முன், கன்னட அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.பின், அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அங்கு வந்த மெட்ரோ ரயில் நிர்வாக கழக எம்.டி., மகேஸ்வர ராவிடம், 'நீங்கள் வெளியிட்டுள்ள விண்ணப்பத்தை பார்க்கும்போது, சென்னை, ஹைதராபாத் மெட்ரோவில் பணியாற்றும் நபர்களை, இங்கு பணி அமர்த்த திட்டமிட்டு போன்று தெரிகிறது. கன்னடர்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம். கன்னடர் அல்லாதவர்களை பணிக்கு சேர்க்க வேண்டும் என்று, விதிமுறை எதுவும் உருவாக்கி உள்ளீர்களா?' என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த பணி

கன்னட அமைப்பினரை, மகேஸ்வர ராவ் சமாதானம் செய்தார்.'நாங்கள் இப்போது நடத்தியது அமைதியான போராட்டம். ஓட்டுநர் பணிக்கு கன்னடர்களை அனுமதிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்' என எச்சரித்துவிட்டு, கன்னட அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RADHAKRISHNAN
மார் 20, 2025 13:06

இங்க உள்ள தமிழர்கள் வேலை செய்வதில்லை ஏமாற்றுகிறார்கள், நிறைய பிரச்சணைகள், வாங்கும் சம்பளத்திற்க்கு வேலை செய்வதில்லை வடக்கன் அப்படியில்லையே? நானும் தமிழன்தான் சாதாரண சம்பளக்காரன்தான்


M.Sulaimankhan
மார் 20, 2025 12:34

அட்ரா சக்கை அட்ரா சக்கை.அப்படி போடு


Sri Digital selvakumar
மார் 20, 2025 11:24

நல்ல முடிவு எடுத்துள்ளார்கள் கர்நாடகா அமைப்பினர்


G Mani
மார் 20, 2025 07:01

கர்நாடகம், அவர்கள் மாநில உரிமையை கடைபிடிப்பது சரியான முடிவு. மற்ற மாநிலங்களை போல் அமைதி காக்கவில்லை.


S.jayaram
மார் 20, 2025 06:23

தமிழ்நாட்டுக் காரர்களுக்கு ரோசம் இல்லை திராவிடனுக்கு அடி பணிந்து சேவகம் செய்கிறான் அவர்களும் இவர்களுக்கு அறிவு வந்துவிடாத படி டாஸ்மாக்,போதை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறார்கள். பெண்களோ ஒருபடி மேலே சென்று 1000 ரூபாய் வருது, இலவச பஸ், டிவி சீரியல்கள் என்று குடும்பத்தை பற்றிய சிந்தனைகளை தொலைத்து விட்டு இருக்கிறார்கள் இவர்களால் எப்போதும் இதில் இருந்து மீள முடியாது. எனவே விரைவில் தமிழ்நாடு தமிழர்கள் இல்லா கலப்பு மாநிலமாக மாறும்


Rathinasabapathi Ramasamy
மார் 20, 2025 09:34

கர்நாடகாவில் மது கடை இல்லையா? மது விலக்கு அமுளில் உள்ளதா? இல்லை மகாராஷ்டிரா வில் மது விலக்கு அமுளில் உள்ளதா? உங்களுக்கு தமிழ் நாட்டில் ஆட்சி செய்பவர்களை குறைச்சொல்லவேண்டும் என்ற ஒரே நோக்கம் தெரிகிறது. அவ்வளவு அக்கறை உள்ள நீங்கள் இந்தியா முழுவதும் மது விலக்கை அமல் படுத்த சொல்லலாமே, அது தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில மக்களும் பயன் பெறுவார்கள் அல்லவா. ஏன் அதை செய்ய மாட்டேன் என்கிறீர்கள். உங்கள் சுயநலம், வாக்கு அரசியல், மற்றமாநில பீ சே பீ கள் தன் மாநிலத்திற்கு எதுனாலும் ஆளும்கட்சியுடன் சேர்ந்து போராடவும் செய்கிறார்கள் குறைச்சொல்லாமல் ஆனால் இங்கு அப்படி இல்லை இல்லாத பிரச்னை, தேவை இல்லாத பிரச்னை யை கொண்டுவந்து மக்களை கேனை னு நினைத்து சட்டம் ஒழுங்கை கெடுப்பதே வடிக்கை யாகிவிட்டது.


Vijayan Viji
மார் 20, 2025 14:37

மிகச்சரியான கருத்து.வாழ்த்துகள்.


Subash BV
மார் 19, 2025 12:53

ALL SUITCASES POLITICS. STANDARD IN CONGRESS PARTY IN RECRUITING GOVT SERVANTS. THIS IS NOT NEW. KANNADIGAS WAKE UP


Sankara N
மார் 19, 2025 11:12

அப்படி என்றால் ஒப்பந்ததாரரும் கர்நாடகத்தை சேர்ந்த நிறுவனமாக இருக்க வேண்டுமா? முட்டாள்கள்.


சமீபத்திய செய்தி