உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செங்கோல் நேர்மையான ஆட்சியின் அடையாளம்: எல்.முருகன் பேட்டி

செங்கோல் நேர்மையான ஆட்சியின் அடையாளம்: எல்.முருகன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆட்சி நேர்மையாகவும், நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியது தான் செங்கோல் என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார்.இது குறித்து எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செங்கோல் தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சமாஜ்வாதி எம்.பி.யின் அறியாமையை காட்டுகிறது. சமாஜ்வாதி எம்.பி., பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p96qvurk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செங்கோலை அவமதிக்கும் செயலுக்கு திமுக மற்றும் இண்டியா கூட்டணியினர் துணை போகிறார்கள். ஆட்சி நேர்மையாகவும், நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியது தான் செங்கோல். சிறந்த ஆட்சியை கொடுத்தவர்கள் சோழர்கள். தெற்கு ஆசியா முழுவதும் ஆட்சி செய்த சோழர்கள் தமிழர்களின் பெருமையை கொண்டு சேர்த்தனர். பார்லிமென்டில் செங்கோலை சாதாரணமாக வைக்கவில்லை. பிரதமர் மோடி தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். பார்லிமென்டில் செங்கோலை நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 20:29

நெல்லிக்காய் மூட்டை கூட்டணி செங்கோலை விமர்சிப்பதன் மூலம் தமிழர்களை அவமதிப்பது இது முதல் முறையல்ல .....


T.sthivinayagam
ஜூன் 27, 2024 19:01

ஒடிசா கோவில் சாவி இப்போது எந்த மாநிலத்தில் உன்னது


Swaminathan L
ஜூன் 27, 2024 17:38

சமாஜ்வாதி கட்சி பிரமுகர் பேசுவது தவறு. செங்கோல் என்பது நீதி தவறாத, நடுநிலையான ஆட்சியின் குறியீடு மற்றும் உத்தரவாதம். ராஜா மாறலாம், ஆட்சி மாறலாம். எவர் ஆட்சிக்கு வந்தாலும் செங்கோல் வழியில் ஆட்சி நடத்துவதே முறையாகும். நேரு காலத்தில் வாக்கிங் ஸ்டிக் என அறியப்பட்டது தற்போது ராஜா கைத்தடி ஆகத் தெரிகிறது சிலருக்கு.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ