உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோஷம் எழுப்பிய பெண்ணால் பரபரப்பு 

கோஷம் எழுப்பிய பெண்ணால் பரபரப்பு 

ஷிவமொகா: ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடிய இடத்தில், 'அல்லாஹு அக்பர்' என கோஷம் எழுப்பிய, முஸ்லிம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.ராமர் கோவில் திறப்பு விழாவை, ஷிவமொகா டவுன் சிவப்ப நாயக்கர் சதுக்கத்தில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவின் மகன் காந்தேஷ் தலைமையில், பா.ஜ.,வினர் நேற்று கொண்டாடினர். அந்த வழியாக சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக, முஸ்லிம் பெண் ஸ்கூட்டரில் தனது மகனுடன் வந்தார்.பா.ஜ.,வினர் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த போலீசார், போக்குவரத்து இடையூறாக ஸ்கூட்டரை நிறுத்தி இருப்பதாக கூறி, முஸ்லிம் பெண்ணை அங்கிருந்து புறப்படும்படி கூறினர்.இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நேரத்தில் பா.ஜ.,வினர், 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கம் எழுப்பினர். பதிலுக்கு அந்த முஸ்லிம் பெண், 'அல்லாஹு அக்பர்' என, கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.அந்த பெண்ணை, கோட்டே போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், அந்த பெண் கோஷம் எழுப்பியதாக காந்தேஷ் குற்றம்சாட்டினார். இதற்கிடையில் கோஷம் எழுப்பிய பெண்ணிற்கு, சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக, போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி