உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகமே இந்தியாவைக் கொண்டாடும் சூழல்: நட்டா மகிழ்ச்சி

உலகமே இந்தியாவைக் கொண்டாடும் சூழல்: நட்டா மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதரபாத்: இன்று உலகமே இந்தியாவைக் கொண்டாடுகிறது என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் 11வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. இன்று நாம் உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டோம். மோடியை மீண்டும் பிரதமராக்கி, இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற வேண்டும். இன்று உலகமே இந்தியாவைக் கொண்டாடுகிறது.

காங்கிரசை சாடிய நட்டா

தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு, பிரதமர் மோடி எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை. பாரத் ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் குடும்ப கட்சிகள். ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவ் மகள் சிறையில் உள்ளார். தற்போது ஊழல்வாதிகள் இணைந்து பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடை ரத்து செய்வார்கள் என பொய் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Srinivasan Krishnamoorthi
மே 06, 2024 19:10

இந்த பெருமை பத்தாது இந்தியா அமெரிக்கா போல ஜனாதிபதியை மக்கள் தேர்ந்தெடுக்கும் படியும் நீதி துறை வழக்குகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவும் மிக சக்தி வாய்ந்த சட்டங்களை உருவக்க வேண்டும்


Ramesh Sargam
மே 06, 2024 18:43

உலகமே இந்தியாவைக் கொண்டாடுகிறது ஆனால், ஒரு சில, சிலபல தேசதுரோகிகள், இந்தியாவில் விளையும் உணவை உண்டு, இந்திய மண்ணில் வளர்ந்து, இந்திய பெண்களை மணந்து, இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது


K.n. Dhasarathan
மே 06, 2024 17:54

உங்கள் ஆட்சியின் சாதனையை சொல்லாமல், இந்த ஜோசியம் சொல்றதை எப்போ விடப்போறீங்க ? இந்தியாவின் கருப்பு பணத்தை ஒழிச்சீங்க? உங்களால் எப்படி இந்தியா வளர்ந்தது ? வளர்ச்சிக்கு என்ன பன்னுனீங்க!


முருகன்
மே 06, 2024 17:40

இன்னும் பல இடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை இதில் உலகம் பாராட்டுகிறது? உங்களை நாடகம் தேர்தல் முடிந்ததும் மாறும்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ