உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம்பளம் கேட்ட வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கு

சம்பளம் கேட்ட வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கு

சிக்கமகளூரு: சம்பள பிரச்னையில், வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்திய, ஆறு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.சிக்கமகளூரு கொப்பா சோமலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு. பெங்களூரில் ஹோட்டல் நடத்துகிறார். சோமலபுராவின் சதீஷ், 27, ஹோட்டலில் வேலை செய்தார். சம்பள பிரச்னையில், சில தினங்களுக்கு முன்பு, வேலையை விட்டு ஊருக்கு வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷின் வீட்டிற்கு சென்ற, மஞ்சுவின் சகோதரர், அவரது நண்பர்கள் ஐந்து பேர், சம்பள பிரச்னையை முடித்து வைப்பதாக கூறி, சதீஷை அழைத்து சென்றனர்.அவரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று, ஒரு மரத்தில் கட்டி வைத்து, இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். பின்னர் கயிற்றை அவிழ்த்துவிட்டு, ஒழுங்காக பெங்களூரு சென்று வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சதீஷ், கொப்பா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது குடும்பத்தினர் அளித்த புகாரில், ஆறு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை